
கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக பிரேக்கிங் பிரேக்கிங் என தமிழக மக்களை கட்டிப்போட்டு வைத்திருந்த ஒட்டுமொத்த தொலைக்காட்சியின் டி.ஆர்.பி ரெட்டிங்கை பிக்பாஸ் என்ற ஒரே நிகழ்ச்சியின் மூலம் தன்வசபடுத்திக்கொண்டது விஜய் டி.வி. தமிழகத்தின் அனைத்து மூலை முடுக்கெல்லாம் பிக்பாஸ் பிக்பாஸ் என பேமஸாகிவிட்டது.
இந்த நிகழ்ச்சியில் அதிகம் பேசப்பட்டதும் வலைதலங்களில் பல்வெறு விமர்சனங்களுக்கு ஆளானதும் ஜுலி என்ற கேரக்டர்தான். இவருக்கு ஆரம்பத்திலிருந்தே பரணி தான் ஆதரவாக இருந்தார். ஆர்த்தி காயத்ரி இருவரும் ஜுலியை அசிஙக படுத்திய நேரத்தில், உன்னை எல்லோரும் வெண்டுமென்றே டார்கெட் செய்கிறார்கள், நீ திருப்பி அடி என ஆறுதல் சொன்னவர் பரணி.
அதன் பிறகு அண்ணா அண்ணா என பாச மழை பொழிந்த ஜுலியானா சமீபத்தில் அவர் பரணியையே எலிமினேட் செய்ய சொன்னது பலருக்கும் அதிர்ச்சியடைய வைத்ததுதான்.
இதுக்குறித்து பரணியின் தங்கை சத்யா தேவி கூறுகையில்; ‘கஞ்சா கருப்பு, காயத்ரி ரகுராம், ஆர்த்தி எனஎல்லாம் பரணி அண்ணனின் முகத்திற்கு நேராக திட்டுகிறார்கள். ஆனால், அண்ணா அண்ணா என்று கூறி நடித்து என் அண்ணனை எலிமினேட் செய்ய சொல்லி முதுகில் குத்தி விட்டார் ஜுலி. இப்படி செய்தது எங்கள் எல்லோருக்குமே அதிர்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.