வடிவேலு டார்ச்சர் தாங்க முடியலை: காஸ்ட்லி இயக்குநரை கதறவிட்டாரா வைகைபுயல்?

First Published Oct 28, 2017, 12:38 PM IST
Highlights
vadivelu give trouble to director Shankar


இந்திய திரையுலகில் ‘மிஸ்டர் S’ எனும் அடைமொழியுடன் மிகப்பெரிய கேன்வாஸை கொண்டிருக்கும் இயக்குநர் நம் ஷங்கர். ஆனானப்பட்ட ‘கான்’ நடிகர்களே இவரால் இயக்கப்பட ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்பேர்ப்பட்ட ஷங்கர் தயாரிக்கும் படத்தில் நடிப்பதென்பது அதுவும் பார்ட் - 2 வில் நடிப்பதற்கு உடம்பில் மச்சம் இருக்க வேண்டும். 

அந்த வகையில் உடம்பெல்லாம் மச்ச நிறமுடைய நம் வைகைப்புயலுக்கு அந்த ஜாக்பாட் ஜமாயாய் அடித்திருக்கிறது. கிட்டத்தட்ட 7 வருடங்களாக சினிமாவில் வனவாசம் சென்று மீண்டிருக்கும் வடிவேலு இந்த வாய்ப்பை வக்கனையாக பற்றிக் கொண்டு அடுத்த ரவுண்டுக்கு ரகளையாக வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். 

ஆனால் வைகையோ, ‘ஏன்டா இவரை புக் பண்ணினோம்!?’ என்று ஷங்கரை தலையிலடிக்க வைத்திருப்பதாக கோலிவுட்வாலாக்கள் தவுசண்ட் வாலா சரவெடியை கொளுத்திப் போடுகிறார்கள். ஆம் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாக ப்ராஜெக்டை வைத்துத்தான் இந்த கூத்து களைகட்டியிருக்கிறது இப்போது.

காரணங்களாக அவர்கள் அடுக்கும் விஷயங்கள் இவைதான்...

*    ஷங்கரின் ‘எஸ் பிக்சர்ஸ்’ உடன், லைக்காவும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் வடிவேலுவுக்கு 3 சி சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டதாம். பூஜை போட்ட அன்று, ஷங்கரே வந்து ஸ்பாட்டில் மணிக்கணக்காய் காத்துக் கிடக்க அன்று முழுக்க அந்தப்பக்கமே வரவில்லையாம் வடிவேலு. சுமார் 4 மணிநேரம் காத்திருந்துவிட்டு கிளம்பிவிட்டாராம் ஷங்கர். 

*    கதையை முழுசா சொல்லணும், அந்த சீனை இப்படி மாத்துங்க, இந்த சீனை அப்படி மாத்துங்க என்று ஏக ரவுசாம் டைரக்டர் சிம்புதேவனிடம். 

*    ஷூட்டிங்குக்கு வரவும் இழுத்தடித்து இடையில் பல நாட்கள் வீணாய் போனதாம். மீண்டும் பேச்சுவார்த்தை முடித்து வடிவேலுவை உள்ளே கொண்டு வருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டதாம்.

*    3 சி பத்தாது சம்பளமாக 5 சி வேண்டும் என்று திடீர் நிபந்தனை போட்டாராம் வடிவேலு. பிறகு பேசிப் பேசி 4 சி என்று முடிவு செய்தார்களாம். 

*    சென்னையில் இரண்டு இடங்களில் போடப்பட்ட பிரத்யேக செட்களில் மொத்தமாகவே 6 நாட்கள் மட்டுமே நடித்த புயல் திடீரென சொல்லாமல் கொள்ளாமல் எங்கேயோ எஸ்கேப் ஆகிவிட்டதாம். 

*    மியூஸிக் டைரக்டர் ஜிப்ரானை பிடிக்கலை என்றாராம். லிரிக்ஸ் பிடிக்கலை என்றாராம், சீன்ஸ் பிடிக்கலை என்கிறாராம். மொத்தத்தில் மண்டை காய்கிறதாம் யூனிட்.

*    வடிவேலுவுடன் இணைந்து நடிக்க ஒரு பெரிய சிரிப்பு நடிகர் பட்டாளத்தையே யூனிட் தயார் செய்து அவர்களுக்கான கதாபாத்திரங்களையும், வசனங்களையும் பக்காவாக ஸ்கெட்ச் செய்து வைத்திருந்தார்களாம். ஆனால் அந்த நடிகர்கள் லிஸ்டை அப்படியே அடித்து திருத்தி ‘இவங்க யாரும் வேண்டாம்.’ என்று சொல்ல விழிபிதுங்கி விட்டதாம் க்ரூ.

*    வடிவின் இம்சையை பொறுத்துப் பொறுத்து பொறுமையிழந்த இயக்குநர் சிம்புதேவன் ஒரு நாள் ஷங்கரை சந்தித்து புலம்பிக் கொட்டிவிட்டாராம். ஆனால் அதற்கு முன்பாகவே இதை தெளிவாக தெரிந்து வைத்திருந்த ஷங்கர், வடிவேலுவுக்கு போனில் தொடர்பு கொள்ள முயன்று அது தோல்வியில் முடிந்ததாம்.

*    ஒரு கட்டத்தில் சட்டென்று கிளம்பி தயாரிப்பாளர் சங்கத்திற்கே இந்த பஞ்சாயத்தை நேரடியாக தானே கொண்டு வந்துவிட்டாராம் ஷங்கர். இவர் வந்திருக்கிறார் என்கிற தகவல் கேள்விப்பட்டு பதறியடித்து வந்த சங்க தலைவர் விஷால், ஷங்கரின் குறைகள் அத்தனையையும் பொறுமையாக கேட்டிருக்கிறாராம். 

விஷால் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்? வடிவேல் தரப்பு விளக்கம் எப்படியிருக்கும்? ஷங்கர் முடிவு செய்திருப்பது போல் இந்த ப்ராஜெக்ட் வேறு ஒரு ஹீரோவின் கைகளுக்கு போகுமா?
வெயிட் அண்டு ஸீ!
 

click me!