சொன்ன சொல்லைக் காப்பாற்றிய தல அஜித்... அடுத்த படமும் சிவாவோடுதான்... இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 
Published : Oct 28, 2017, 10:24 AM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
சொன்ன சொல்லைக் காப்பாற்றிய தல அஜித்... அடுத்த படமும் சிவாவோடுதான்... இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சுருக்கம்

Ajith to team up with Siva for the fourth time

தல அஜித்தின் 58வது படத்தையும் சிறுத்தை சிவாதான் இயக்குகிறார்  
என அஜித் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தல அஜித்தின் 58வது படத்தை சிவா இயக்குகிறார், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

தல அஜித்தை வைத்து வீரம்,வேதாளம், விவேகம் என மூன்று படங்களை அடுத்தடுத்து இயக்கினார் சிறுத்தை சிவா. முதல் இரண்டு படங்களும் தாறு மாறு ஹிட் அடித்தது.சிவாவின் மேக்கிங் ஸ்டைல், பன்ச் டைலாக், அனல் பறக்கும் மாஸ் சண்டை காட்சிகள் என அஜித் ரசிகர்களுக்கு ரொம்பப் பிடித்த இயக்குநராகிவிட்டார் சிவா. 

மூன்றாவதுமுறையாக அஜித்துடன் இணைந்த சிவா விவேகம் படத்தை இயக்கினார் இந்தப் படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரித்திருந்தார்.

அஜித் மற்றும் சிவா கூட்டணியில் வெளியான 'வீரம்', 'வேதாளம்' ஆகிய படங்கள் மெகா ஹிட் அடித்ததாலும், இக்கூட்டணியில் மூன்றாவதாக விவேகம் படம் அறிவிப்பு வெளியானத்திலிருந்து ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தாலும் படம் வெளியீடு மிக பிரம்மாண்டமாக இதுவரை அஜித் படத்திற்கு கிடைக்காத மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது.

விவேகம் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் 'தடைகளை உடைத்து சரித்திரம் படைத்து' வருகிறது என்று கூறலாம் சுமார் 90 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது இப்படத்தின் தயாரிப்பு செலவு, உலகம் முழுக்க மிக பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டு ரூ. 120 கோடிக்கு மேல் விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்தது. படம் நல்ல வசூலை கொடுத்தாலும் பெரிய அளவிற்கு லாபம் ஈட்டவில்லை, தயாரிப்பாளர் அமைதிகாத்தார். எனவே அடுத்த படமும் சத்யஜோதி நிறுவனத்திற்கு  நடித்து கொடுப்பார் என பேச்சு அடிபட்டது. 

ஆனால் இப்படத்தை விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தல அஜித் இயக்குநர் சிவாவுக்கு ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதியை மீறவில்லை. நான்காவது முறையாக சிவாவுக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளார். இதுகுறித்து நேற்றிரவு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!