ஆஸ்கார் நாயகன்’ வைகைப்புயல் வடிவேலுவுக்கு 59வது பிறந்தநாள்!! ட்ரெண்ட் ஆகும் மீம்ஸ்...

Published : Oct 10, 2018, 05:31 PM IST
ஆஸ்கார் நாயகன்’ வைகைப்புயல் வடிவேலுவுக்கு 59வது பிறந்தநாள்!! ட்ரெண்ட் ஆகும் மீம்ஸ்...

சுருக்கம்

’பில்ட் அப் பண்ணுறேனோ பீலா விடுறேனாங்குறது முக்கியம் இல்லை. ஆனா நாம என்ன பண்ணுனாலும் அதை இந்த உலகம் உத்துப் பாக்கணும்’ இம்மாதிரியான அரிய செறிவான கருத்துக்களுடன் தமிழ் சமூகத்தை சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக உத்துப் பாக்கவைத்துக்கொண்டிருப்பவர் ‘வைகைப்புயல் வடிவேலு.

ரஜினி,கமல், அஜித்,விஜய்களுக்குக் கூட அவ்வப்போது தோல்விகளைக் கொடுத்து வீட்டில் உட்கார வைத்த தமிழ்சினிமா வடிவேலுவுக்கு அப்படி ஒரு ஓய்வைக்கொடுக்கவேயில்லை. காரணம் நாலு படத்துக்கு ஒரு படமாவது வயிறு வலிக்க சிரிக்க வைக்க நான் கியாரண்டி என்று அவர் அள்ளி வழங்கிய வெரைட்டியான நகைச்சுவை பாத்திரங்கள்.

அரசியலில் கால்வைத்து அவ்வப்போது சறுக்கினாலும் சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்பது மறு எண்ட்ரியில் விட்டதுக்கும் சேர்த்து ஸ்கோர் பண்ணிவிடுவார் வடிவேலு.

இன்று மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு காமெடி பண்ண வடிவேலுவை விட்டால் வேறு நாதியில்லை. எப்படியும் வடிவேலுவை வைத்து ஒர் நூறு மீம்ஸ்களாக தயாராகும் என்று ‘சூப்பர் டீலக்ஸ்’ பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தனது டிசைனிலிருந்த அத்தனை கேரக்டர்களையும் வடிவேலுவாக மாற்றி மறுநாளே ஒரு டிசைனை வடிவேலு எவ்வளவு உச்சத்திலிருக்கிறார் என்பதற்கான அத்தாட்சி. நாகேஷ், கவுண்டமணிகளுக்கு அப்புறம் வடிவேலு ஒரு தனி சகாப்தம்.

இதுவரை அவர் வாங்கிய விருதுகளின் பட்டியல் கிடைக்கவில்லை. இருந்தாலும் அவரது 59 வது பிறந்த நாளான இன்று கலைமாமணியில் துவங்கி பத்மவிபூஷன், பத்ம பூஷன், பாரத்ரத்னா, நோபெல், ஆஸ்கார் ஆகிய ஒரு சில விருதுகளை மட்டும் வடிவேலுக்கு வழங்கி அந்த விருதுகளுக்கு பெருமை சேர்ப்போம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மாற்றப்படும் பராசக்தி ரிலீஸ் தேதி... ஜனநாயகனை காலி பண்ண என்னென்ன பண்றாங்க பாருங்க..!
அய்யய்யோ மீனா கண்டுபிடிச்சிட்டாளே... சீட்டிங் பண்ணி சிக்கிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்