தடுப்பூசிக்கும் விவேக்கின் மாரடைப்புக்கும் துளியும் சம்பந்தம் இல்லை..! சுகாதார செயலர் விளக்கம்...!

By manimegalai aFirst Published Apr 16, 2021, 6:41 PM IST
Highlights

நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட பின், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால், தடுப்பூசிக்கும் விவேக் உடல் நிலை பாதிக்க பட்டதற்கும் சம்பந்தம் உள்ளதாக பரப்பப்படும் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் SIMS மருத்துவர் ராஜு சிவசாமி ஆகியோர் செய்தியாளர்களை விவேக் உடல் நிலை குறித்து விளக்கம் கொடுத்தனர்.
 
செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் கூறியதாவது... "கொரோனா தடுப்பு பூசிக்கும் நடிகர் விவேக்கின் உடல்நிலை கோளாறுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை.  மேலும் அவருக்கு கொரோனா சோதனை மேற்கொண்ட போதும் நெகடிவ் என வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 11 மணியளவில், அவரது குடும்பத்தினர் விவேக்கை மருத்துவமனைக்கு அழைத்து வரும் போதே சுயநினைவு அற்ற நிலையில் தான் அழைத்து வந்தனர். அவரை பரிசோதனை செய்த போது, அவரின் இடது புற ரத்த குழாயில் 100%  அடைப்பு இருந்ததால் மாரடைப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஆஞ்சியோ செய்து அடைப்பு நீக்கப்பட்டாலும், அவரது உடல் நிலை கவலைக்கிடமாக தான் உள்ளதாகவும், அவரது உடல் நிலையை 24 நேரமும் கண்காணிக்க வேண்டியுள்ளதாகவும் SIMS மருத்துவர் ராஜு சிவசாமி தெரிவித்துள்ளார். அதே போல் விவேக்கின் உடல் நிலை மோசமாகவே இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணனும் உறுதிப்படுத்தியுள்ளார். 

தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் சுமார்  5.8 லட்சம் நபர்கள் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். எனவே நடிகர் விவேக்கிற்கு ஏற்பட்ட பாதிப்பு, தற்செயலாதே தவிர தடுப்பூசிக்கும் இதற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்பதே உண்மை என்றும், மக்கள் தடுப்பூசி போட்டு கொள்வதில் அச்சப்பட தேவை இல்லை என்றும் செய்தியாளர்கள் சந்திப்பின் போது வலியுறுத்தினார் சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன்.

click me!