'வாத்தி கம்மிங்' பாடலின் வேற லெவல் சாதனை..! ட்விட்டரை தெறிக்க விட்ட ரசிகர்கள்..!

Published : Mar 21, 2021, 06:52 PM IST
'வாத்தி கம்மிங்' பாடலின் வேற லெவல் சாதனை..! ட்விட்டரை தெறிக்க விட்ட ரசிகர்கள்..!

சுருக்கம்

பட்டையை கிளப்பும் இசையில், புரியாமல் இருந்தாலும் புதிதான வார்த்தைகள் என படு வித்தியாசமாக இருந்த, வாத்தி கம்மிங் பாடல் வெளியான போதே டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இதை தொடர்ந்து தற்போது, 100 மில்லியன் ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.  

பட்டையை கிளப்பும் இசையில், புரியாமல் இருந்தாலும் புதிதான வார்த்தைகள் என படு வித்தியாசமாக இருந்த, வாத்தி கம்மிங் பாடல் வெளியான போதே டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இதை தொடர்ந்து தற்போது, 100 மில்லியன் ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள, மாஸ்டர் படம் ஏப்ரல் மாதமே, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோடை விடுமுறை ஸ்பெஷலாக வெளியாக இருந்த நிலையில் , கொரோனா பிரச்சனையின் காரணமாக பொங்கல் திருவிழாவின் போது வெளியானது. பிரமாண்ட செலவில் உருவாகியுள்ளதால் இந்தப்படம் கண்டிப்பாக, திரையரங்கில் தான் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் ஸேவியர் பிரிட்டோ தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். மேலும் முரட்டு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் விஜய் டிவி தீனா, கௌரி கிஷன், ஆண்ட்ரியா, ரம்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.

'மாஸ்டர்' படத்தில் இருந்து வெளியான குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங், வாத்தி ரைடு என அனைத்து பாடல்களும்,  ரசிகர்களை கவர்ந்து சாதனை படைத்து விட்டது. குறிப்பாக வாத்தி கம்மிங் பாடலுக்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவரவருக்கு பிடித்த வர்ஷனில் டான்ஸ் ஆடி வெளியிட்டு லைக்குகளை அள்ளினார்.

இது ஒரு புறம் இருக்க, தற்போது வாத்தி கம்மிங் பாடல், யூ-டியூபில் 100  மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. இந்த தகவலை, தளபதி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் #VaathiComingHits100MViews என்ற ஹேஷ்டேக்கில் விஜய் ரசிகர்கள் பதிவிட்டனர். இது ட்விட்டரில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Vaa Vaathiyaar படம் எப்படி இருக்கு | Movie Review | Vj Viswa
தலைவர் தம்பி தலைமையில் படம் எப்படி இருக்கு ?! | Movie Review | Vj Viswa