இயக்குனர் ஆர்.ரவிக்குமார் வீட்டில் நிகழ்ந்த சோகம்..! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!

Published : Mar 21, 2021, 06:34 PM IST
இயக்குனர் ஆர்.ரவிக்குமார் வீட்டில் நிகழ்ந்த சோகம்..! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!

சுருக்கம்

நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து, 'அயலான்' படத்தை இயக்கியுள்ள, இயக்குனர் ஆர்.ரவிக்குமாரின் தாயார் காலமாகி விட்டதாக வெளியாகியுள்ள தகவலை தொடர்ந்து, பிரபலங்கள் பலர் ரவிக்குமாரின் தயார் மறைவிற்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.  

நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து, 'அயலான்' படத்தை இயக்கியுள்ள, இயக்குனர் ஆர்.ரவிக்குமாரின் தாயார் காலமாகி விட்டதாக வெளியாகியுள்ள தகவலை தொடர்ந்து, பிரபலங்கள் பலர் ரவிக்குமாரின் தயார் மறைவிற்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழில் கடந்த 2015ஆம் ஆண்டு நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் மியா ஜார்ஜ் நடிப்பில் வெளியான 'இன்று நேற்று நாளை' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆர்.ரவிக்குமார். இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது 'அயலான்' என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்

.

ஏலியனை மையப்படுத்தி , சயின்டிஃபிக் மூவியாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த வருடத்தின் இறுதிக்குள் இப்படம் ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். 

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஆர்.ரவிக்குமாரின் தாயார் சமீப காலமாகவே...  உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலமாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவலை அவரது நெருங்கிய நண்பரும் இயக்குனருமான  கவுர்வ் நாராயணன் உறுதிப்படுத்தியுள்ளார். இதையடுத்து ரவிக்குமாரின் தாயாருக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025ல் சாங்க்ஸில் பட்டைய கிளப்பிய டாப் 5 பாடல்கள்; ஓ இந்த பாடல் தான் டாப்பா?
தங்கமயிலின் 80 சவரன் நகையில் 8 சவரன் மட்டும் தங்கம் : கதிரிடம் உண்மையை வெளிப்படுத்திய ராஜீ!