அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’யைக் கைப்பற்ற களம் இறங்கிய உதயநிதி ஸ்டாலின்...

Published : Jul 27, 2019, 10:35 AM IST
அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’யைக் கைப்பற்ற களம் இறங்கிய உதயநிதி ஸ்டாலின்...

சுருக்கம்

ரிலீஸுக்கு முழுசாக இன்னும் இரண்டு வாரங்கள் கூட இல்லாத நிலையில் அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் தமிழக தியேட்டர் உரிமைகள் யாருக்கும் தரப்படாமல் இருப்பது கோடம்பாக்கத்தின் பரபரப்பான செய்தி ஆகியிருக்கிறது.  

ரிலீஸுக்கு முழுசாக இன்னும் இரண்டு வாரங்கள் கூட இல்லாத நிலையில் அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் தமிழக தியேட்டர் உரிமைகள் யாருக்கும் தரப்படாமல் இருப்பது கோடம்பாக்கத்தின் பரபரப்பான செய்தி ஆகியிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை வாங்க தி.முக.வின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன் வந்திருக்கிறார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படம் நேர்கொண்டபார்வை. இதி அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் மொழிமாற்று என்பது குறிப்பிடத்தக்கது.இப்படம் ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியாகும் என்று  அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு பத்திரிகை விளம்பரங்களிலும் தேதி குறிப்பிடப்படுகிறது.

ஆனால் இப்படத்தின் வியாபாரம் இன்னும் முடிவடையவில்லையாம். அஜீத் நடித்திருந்தும் இந்தப் பட வியாபாரம் தாமதமாவதற்குக் காரணம், பட நிறுவனம் சொல்லும் விலைக்கு வாங்க எல்லோரும் பயப்படுவதுதான் என்று சொல்லப்படுகிறது.இந்தப்படத்தின் தமிழக திரையரங்க உரிமைக்காக தயாரிப்பு நிறுவனம் கேட்கும் விலை 65 கோடி என்று சொல்லப்படுகிறது.

தமிழகம் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகள் அனைத்துக்குமாக இந்த விலை தருவதாகச் சொல்லி ஜெமினி நிறுவனம் பேசிக்கொண்டிருக்கிறதாம். ஆனாலும் இதுவரை எவ்வித ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என்கிறார்கள்.இதற்கிடையே இப்படத்தை விநியோக முறையில் வெளியிட உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் முன் வந்துள்ளதாம். அவர்களுடனும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.இவ்விரு நிறுவனங்களில் எந்த நிறுவனம், எந்த அடிப்படையில் நேர்கொண்டபார்வை படத்தை வெளியிடவிருக்கிறது என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும் என்கிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'கையெடுத்து கும்புடுறேன்;இப்படி செய்யாதீர்கள்' - ஸ்ரீலீலா மனம் திறந்து வேண்டுகோள்!
9-ல் 8 படங்கள் தோல்வி.. பான் இந்தியா ஸ்டார் தான் கடைசி நம்பிக்கை!