’டைரக்டர்கள் எங்களை சர்க்கஸ் கோமாளிகள் போல் நடத்துகிறார்கள்’...பிரபல நடிகை ஓபன் டாக்...

Published : Jul 27, 2019, 10:23 AM IST
’டைரக்டர்கள் எங்களை சர்க்கஸ் கோமாளிகள் போல் நடத்துகிறார்கள்’...பிரபல நடிகை ஓபன் டாக்...

சுருக்கம்

’நடிப்புத் தேர்வு என்ற பெயரில் நடிகைகளை இயக்குநர்கள் பெரும்பாலும் கோமாளிகள் போலவே நடத்துகிறார்கள். ஆடிஷன் டெஸ்டுகளுக்குச் சென்று வீடு திரும்பும்போது பலமுறை அழுதுகொண்டே திரும்பியிருக்கிறேன்’என்கிறார் பிரபல நடிகை நோரா பதேகி.  

’நடிப்புத் தேர்வு என்ற பெயரில் நடிகைகளை இயக்குநர்கள் பெரும்பாலும் கோமாளிகள் போலவே நடத்துகிறார்கள். ஆடிஷன் டெஸ்டுகளுக்குச் சென்று வீடு திரும்பும்போது பலமுறை அழுதுகொண்டே திரும்பியிருக்கிறேன்’என்கிறார் பிரபல நடிகை நோரா பதேகி.

கனடாவை சேர்ந்தவர் நடிகை நோரா பதேகி. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் கவுரவ தோற்றத்திலும் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆடும் வேடங்களிலும் நடிக்கிறார். ராஜமவுலியின் ‘பாகுபலி’, கார்த்தியின் ’தோழா’ படங்களிலும் குத்துப்பாடல்களுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். அவர் தற்போது இந்தியில் வருண் தவானின் 'ஸ்ட்ரீட் டான்ஸர்' படத்தில் நடித்து வருகிறார். 

இந்தியாவில் திரையுலக பயணம் என்பது மிகக் கடினமானது என்று கூறும் அவர்,’ வெளிநாட்டவர்கள் வாழ்வது எளிது அல்ல. நாங்கள் நிறைய கஷ்டப்படுகிறோம். அது யாருக்கும் தெரிவது இல்லை. எங்களிடம் இருந்து பணம் பறிக்கிறார்கள். எனக்கும் நடந்துள்ளது. என்னை கனடாவில் இருந்து இங்கு அழைத்து வந்த ஏஜென்சி ரொம்ப மோசம், அவர்கள் என்னை சரியாக வழிநடத்தவில்லை. அதனால் அந்த ஏஜென்சியில் இருந்து வெளியேற நினைத்தேன். ஏஜென்சியில் இருந்து வெளியேறினால் உங்களின் ரூ. 20 லட்சம் பணத்தை திருப்பிக் கொடுக்க மாட்டோம் என்றார்கள். நான் விளம்பர படங்களில் நடித்து சம்பாதித்த ரூ. 20 லட்சத்தை இழந்தேன். இந்த பணம் போனால் என்ன கஷ்டப்பட்டு உழைத்து இதைவிட நிறைய சம்பாதிக்கலாம் என்று நினைத்தேன்.

அடுத்து, 8 பெண்களுடன் சேர்ந்து ஒரு அபார்ட்மென்ட்டில் இருந்தேன். அந்த அபார்ட்மென்ட்டுக்குள் நுழைந்தபோது அதிர்ச்சி அடைந்தேன். என்னுடன் தங்கி இருந்தவர்கள் என் பாஸ்போர்ட்டை திருடி விட்டனர். அதனால் என்னால் கனடாவுக்கு செல்ல முடியாமல் போனது. அந்த அபார்ட்மென்ட்டில் வசித்தது எல்லாம் கொடுமை.பின்னர் நான் இந்தி கற்கத் தொடங்கினேன். ஆனால் நடிப்பு தேர்வு எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. நான் மனதளவில் தயாராகாததால் மிகவும் சிரமப்பட்டேன். என்னை சர்க்கஸ் கோமாளி போன்று கேலி செய்து சிரித்தார்கள். என்னை சீண்டிப் பார்த்தார்கள்.நடிப்பு தேர்வு முடிந்து வீட்டிற்கு செல்லும் வழி எல்லாம் அழுது கொண்டே சென்றேன். ஒரு காஸ்டிங் ஏஜெண்டோ, நீ தேவையில்லை, திரும்பிப் போ என்றார். அதை நான் ஒருபோதும் மறக்கவே மாட்டேன்’.என்று புலம்புகிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தனுஷின் 54-வது படம் ‘கர’... இந்த ஷார்ட் டைட்டில் பின்னணியில் இப்படியொரு கதை இருக்கா..!
Vaa Vaathiyaar Day 1 Box Office : பராசக்தியிடம் சரண்டர் ஆன வா வாத்தியார்... முதல் நாள் வசூலே இவ்வளவுதானா?