ராகுல் காந்தி முன்னிலையில் திடீரென காங்கிரஸில் இணைந்த கமல் பட கதாநாயகி...

By Muthurama LingamFirst Published Mar 27, 2019, 4:50 PM IST
Highlights

சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ஆஸ்தான நாயகியும் கமலின் ‘இந்தியன்’பட ஹீரோயினுமான ஊர்மிளா மடோன்கர் சற்று முன்னர் டெல்லியில் ராகுல் காந்தி முன்னிலையில் தன்னைக் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார். அவருக்கு வயது 45.

சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ஆஸ்தான நாயகியும் கமலின் ‘இந்தியன்’பட ஹீரோயினுமான ஊர்மிளா மடோன்கர் சற்று முன்னர் டெல்லியில் ராகுல் காந்தி முன்னிலையில் தன்னைக் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார். அவருக்கு வயது 45.

இரு தினங்களுக்கு முன் , 'மன்மத லீலை’, 'நினைத்தாலே இனிக்கும்’, 'சலங்கை ஒலி’, 'தசாவதாரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஜெயப்பிரதா, சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். 

இந்நிலையில் அதற்கு பதிலடி போல , 'ரங்கீலா’, 'சத்யா’ உள்ளிட்ட படங்களில் நடித்து பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகை ஊர்மிளா மடோன்கர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இன்று  டெல்லியில் சந்தித்து தன்னை காங்கிரஸில் இணைத்துக்கொண்டார். இவர், கமல்ஹாசன் ஷங்கர் காம்பினேஷனான 'இந்தியன்’ படத்தில் செகண்ட் ஹீரோயினாக  நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ’ரங்கீலா’ தொடங்கி இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் படங்களில் படு கவர்ச்சியாக நடித்தவர் ஊர்மிளா.

இவர், மும்பை காங்கிரஸின் முன்னாள் தலைவர் சஞ்சய் நிரூபத்தை நேற்று சந்தித்து கட்சியில் இணைவது குறித்து பேசியிருக்கிறார். அதையொட்டி டெல்லியில் ராகுலை சந்தித்து கட்சியில் இணைந்த அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,’ ''தேர்தலுக்காகவோ சீட் கொடுப்பார்கள் என்பதற்காகவோ  நான் அரசியலுக்கு வரவில்லை; தேர்தல் முடிந்த பிறகும் காங்கிரஸ் கட்சியில் தொடர்வேன்” என்று கூறியுள்ளார். 
 

click me!