
நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் கட்டும் பணி பல ஆண்டுகளாகவே நிலுவையில் இருந்து வரும் நிலையில், சமீபத்தில் நடந்த நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையிலான ஒரு கூட்டத்தில், கட்டிடத்தை விரைந்து கட்டி முடிக்க சுமார் 40 கோடி ரூபாய் வரை கடன் பெற பொதுச் செயலாளர் விஷால் ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் வெளியானது.
பெருந்தொற்று காலகட்டத்தில் விலைவாசி 25 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ள நிலையில், வங்கியில் 40 கோடி ரூபாய் வரை கடன் வழங்க தகுதி உள்ள நிலையில் நடிகர் சங்கம் இருப்பதாக தகவல்கள் வெளியானது. மேலும் வங்கியில் வாங்கி கட்டிடம் கட்டப்பட உள்ள நிலையில், அந்த கடனை கலை நிகழ்ச்சிகள் நடத்தி அடைக்கவும் திட்டமிடப்பட்டது.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் போன்ற உச்ச நட்சத்திரங்களிடம் நிதி கேட்டு அடைக்கவும் நடிகர் சங்கம் திட்டமிட்டிருந்தது. இதற்கான பணியில் தொடர்ச்சியாக நடிகர் சங்க உறுப்பினர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்த சூழ்நிலையில் இன்று மார்ச் 9ம் தேதி சனிக்கிழமை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினராக தற்பொழுது செயல்பட்டு வரும் மூத்த நடிகரும், மநீம கட்சியின் தலைவருமான திரு. கமலஹாசன் தனது சொந்த நிதியிலிருந்து 1 கோடி ரூபாயை கொடுத்துள்ளார். அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன் ஆகியோர் அதற்கான காசோலையை பெற்றுக்கொண்டனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.