
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவே தெரியாமல் தமிழ் சினிமாவிற்குள் நடிகராக அறிமுகம் கொடுத்தாலும் படத்திற்கு படம் இவருடைய நடிப்பின் தரம் உயர்ந்துகொண்டே வருகிறது.
கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த 'மனிதன்' சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் நடிப்பில் வெளிவந்த 'பொதுவாக என் மனசு தங்கம்' திரைப்படம், நடுநிலையான விமர்சனங்களைத் தான் பெற்றது.
தற்போது இவருடைய நடிப்பில் வெளியாக தாயாராகிக் கொண்டிருக்கும் திரைப்படம் 'இப்படை வெல்லும்'. இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் சிவகார்த்திகேயன், ராதிகா, ஆர்.கே.சுரேஷ், கிருத்திகா உதயநிதி, படத்தின் நாயகி மஞ்சிமா மோகன் என பலர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய உதயநிதி, முதல் முறையாக இந்தப் படத்திற்காக வில்லனிடம் அடிவாங்கி நான் அழுததை மறக்க முடியாது என்று கூறியுள்ளார். இந்தப் படத்தில் வில்லனாக டானியல் பாலாஜி மற்றும் ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
டானியல் பாலாஜி சண்டைக் காட்சியின் போது மிகவும் நிதானமாக சண்டை போட்டார். ஆனால் ஆர்.கே.சுரேஷ் அந்தக் காட்சி தத்ரூபமாக வர வேண்டும் என தன்னை நிஜமாக அடித்து செட்டில் அழ வைத்து விட்டார். அதை தான் மாஸ்டரிடம் பின்பு கூறியதாகவும், இந்தக் காட்சி நன்றாக வரவேண்டும்; அதனால் வலியைப் பொறுத்துக்கொள்ளுங்கள் என அவர் கூறியதாகவும் இசை வெளியீட்டு விழாவில் தன் சோகமான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார் உதயநிதி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.