ஸ்பைடரால் தயாரிப்பாளருக்கு வந்த சோதனை..!  எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா? 

 
Published : Oct 13, 2017, 05:58 PM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
ஸ்பைடரால் தயாரிப்பாளருக்கு வந்த சோதனை..!  எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா? 

சுருக்கம்

Mahesh Babus role in the movie Murugadas has been reportedly sponsored by the spider.

முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த ஸ்பைடர் படத்தால் ரூ.50 கோடி தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குனர் முருகதாஸ் அஜித் நடித்த தீனா படம் மூலம் இயக்குனராக முதல் முதலில் தமிழ் திரையுலகில் கால் பதித்தார். 

அடுத்தடுத்து  படங்களின் மூலம் பல சாதனைகளை புரிந்தார். தற்போது, தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களை இயக்கி வருகிறார். 

இவரது ரமணா திரைப்படம், நடிகர் விஜயகாந்தின் முக்கியத் திரைப்படமாக அமைந்ததுடன், அதன் புரட்சிகரமான கருத்துக்களுக்காக பெரிதும் பாராட்டப்பட்டது.

இதையடுத்து சூர்யாவுக்கு கஜினி, ஏழாம் அறிவு, விஜய்க்கு துப்பாக்கி, கத்தி, ஆகிய படங்களை இயக்கி வெற்றி திரைப்படமாக கொடுத்தார். 

இதைதொடர்ந்து அவர் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஹிட் நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ஸ்பைடர். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. 

இதுதான் மகேஷ் பாபுவுக்கு தமிழில் முதல்படம். அதனால் மிகவும் வெற்றிப்படமாக அமையும் என அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்டது. 

ஆனால் அதற்கு நேர் மாறாக ஸ்பைடர் படம் அவ்வளவாக ஓடவில்லை. இப்படம் இந்தியாவிலேயே அதிகம் நஷ்டம் அடைந்த படங்களில் 3-வது இடத்தை வகிக்கிறது.

 இந்த படம் ரூ 150 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளரே கூறி வரும் நிலையில், ஸ்பைடர் படத்தால் ரூ.50 கோடி தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!