Indian 2 : ரெட் ஜெயண்ட் வசம் செல்கிறதா இந்தியன் 2?... உதயநிதியின் திடீர் அப்டேட்டால் ரசிகர்கள் குழப்பம்

By Asianet Tamil cinemaFirst Published Jun 7, 2022, 3:11 PM IST
Highlights

Indian 2 : முடங்கிக் கிடக்கும் இந்தியன் 2 படத்தின் அப்டேட்டை உதயநிதி வெளியிட்டதால், அவர் அப்படத்தை கையிலெடுக்க போகிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ் சினிமாவில் உதயநிதியின் ஆதிக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. பெரிய அளவில் அவர் படங்களில் நடிக்காவிட்டாலும், படங்களை வெளியிடுவதில் முனைப்பு காட்டி வருகிறார். கடந்த ஓராண்டில் தமிழகத்தில் வெளியான பெரும்பாலான பெரிய பட்ஜெட் படங்களை இவரது ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், இவர் வெளியிட்ட படம் தான் சிவகார்த்திகேயனின் டான். லைகா நிறுவனமும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் வெளியிட்டது. இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்ததோடு, பாக்ஸ் ஆபிஸில் ரூ.125 கோடிக்கு மேல் வசூலித்தது.

இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக நேற்று சென்னையில் சக்சஸ் மீட் நடத்தப்பட்டது. இதில் உதயநிதியும் கலந்துகொண்டார். இந்த விழாவில் டான் படத்தைப் பற்றி பேசிய அவர் திடீரென கமலின் இந்தியன் 2 பட அப்டேட்டையும் வெளியிட்டார். அப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கப்படும் என அவர் கூறியதை கேட்டு அனைவரும் ஷாக் ஆகினர்.

இதை வைத்து பார்க்கும் போது முடங்கிக் கிடக்கும் இந்தியன் 2 படத்தை உதயநிதி உயிர்பிக்க போகிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் வெளியான கமலின் விக்ரம் படத்தை உதயநிதி வெளியிட்டதால், அவர் இந்தியன் 2 படத்தில் இணை தயாரிப்பாளராக இணைய வாய்ப்புள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

இதையும் படியுங்கள்... Vignesh shivan : நயன்தாரா உடனான திருமணம் கிறிஸ்தவ முறைப்படியா?... இந்து முறைப்படியா? - விக்னேஷ் சிவன் விளக்கம்

click me!