“ஸ்டாலினுடன் இணைந்த ரஜினிக்கு நன்றி”... சூப்பர் ஸ்டார் ட்வீட்டை வைத்து திமுகவுக்கு விளம்பரம் தேடிய உதயநிதி!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 1, 2020, 6:45 PM IST
Highlights

ரஜினியின் ட்வீட்டை வைத்து திமுக பெருமை பேசிக்கொண்ட உதயநிதி ஸ்டாலினால் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் செம்ம கொந்தளிப்பில் உள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் செல்போன் கடை நடத்தி வந்தனர். ஊரடங்கு நேரத்தில் கூடுதல் நேரம் கடையை திறந்து வைத்ததற்காக போலீசார் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவல் நிலையத்தில் வைத்து தந்தை, மகனை கொடூரமாக தாக்கிய போலீசார், மறுநாள் கோவில் பட்டி கிளை சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்ட அப்பா மற்றும் மகன் உடல்நலக் கோளாறு காரணமாக இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் போலீசாரின் தாக்குதலால் தான் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தந்தை, மகனின் இந்த கொடூர மரணத்திற்கு நீதி கேட்டு தமிழக மக்கள் கொந்தளித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவிக்காதது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. 

 

இதையும் படிங்க: 

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் மரண விவகாரம் தொடர்பாக சூப்பர் ஸ்டார் ட்வீட் செய்திருந்தார். தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக் கூடாது. #சத்தியமா_விடவே_கூடாது என குறிப்பிட்டிருந்தார். 

 

இதையும் படிங்க: 

அதில் ரஜினியில் குரலுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்தாலும் சிலர் எதிர்மறையான விமர்சனங்களையும் பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்து நெட்டிசன்கள் 'எந்த தந்தை,எந்த மகன் ,என்ன ஊரு, என்ன சம்பவம் இப்படி எதுவுமே சொல்லமா ஒரு கண்டண பதிவை போடமலே இருக்கலாம்... என்றும் மற்றொருவர், சம்பவம் நடந்து 7 நாட்களுக்கு பிறகு கருத்து தெரிவித்துள்ள ரஜினிகாந்தை விடவே கூடாது... சத்தியமா விடவே கூடாது என்றும் கருத்துக்களை கூறி வருகின்றனர். 

தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என நீதிமன்றம் ‘பல’ நாட்களுக்கு முன்பே குறிப்பிட்டுள்ளது. அக்குடும்பத்துக்கு நீதிகிடைக்க ஐ எழுப்பும் தலைவர் அவர்களின் தொடர் முயற்சியில் இணைந்துகொண்ட சூப்பர்ஸ்டார் அவர்களுக்கு நன்றி. https://t.co/BssHT7gDVh

— Udhay (@Udhaystalin)

இதையும் படிங்க: 

இதனிடையே ரஜினிகாந்தின் ட்வீட்டை டேக் செய்துள்ள உதயநிதி ஸ்டாலின், தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என நீதிமன்றம் ‘பல’ நாட்களுக்கு முன்பே குறிப்பிட்டுள்ளது. அக்குடும்பத்துக்கு நீதிகிடைக்க தமிழக முதலமைச்சரை எழுப்பும்  தலைவர் மு.க.ஸ்டாலின்   அவர்களின் தொடர் முயற்சியில் இணைந்துகொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். இதை ‘சின்ன இஷ்யூ’வாக நினைக்கும் மனநிலையை மாற்றிக்கொண்டு, ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் சட்டப் பணியில் தங்களை உண்மையாக ஈடுபடுத்திக்கொள்ளுமாறு பிரதமரையும், மத்திய அரசையும் கேட்டுக்கொண்டுள்ளார். ரஜினியின் ட்வீட்டை வைத்து திமுக பெருமை பேசிக்கொண்ட உதயநிதி ஸ்டாலினால் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் செம்ம கொந்தளிப்பில் உள்ளனர். 

click me!