'மீடூ' மூலம் பாலியல் புகார் பரப்பி விடுவோம்! பிரபல நடிகரை மிரட்டி பணம் பறித்த இரண்டு நடிகைகள் கைது!

Published : Apr 30, 2019, 07:27 PM IST
'மீடூ' மூலம் பாலியல் புகார் பரப்பி விடுவோம்!  பிரபல நடிகரை மிரட்டி பணம் பறித்த இரண்டு நடிகைகள் கைது!

சுருக்கம்

பெண்கள் தங்களுக்கு நடக்கும் பாலியல் கொடுமை குறித்து வெளிப்படையாக கூறுவதற்காக உருவாக்கப்பட்ட 'மீடூ' அமைப்பு மூலம், வதந்தியை பரப்பி விடுவோம் என பிரபல நடிகரை மிரட்டி வந்த இரண்டு நடிகைகளை போலீசார் கைது செய்துள்ளனர்.  இவர்களுக்கு உடந்தையாக இருந்த போலீஸ் அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

பெண்கள் தங்களுக்கு நடக்கும் பாலியல் கொடுமை குறித்து வெளிப்படையாக கூறுவதற்காக உருவாக்கப்பட்ட 'மீடூ' அமைப்பு மூலம், வதந்தியை பரப்பி விடுவோம் என பிரபல நடிகரை மிரட்டி வந்த இரண்டு நடிகைகளை போலீசார் கைது செய்துள்ளனர்.  இவர்களுக்கு உடந்தையாக இருந்த போலீஸ் அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக நடிகைகள் மற்றும் அலுவலகங்களில் வேலைக்கு செல்லும் சாதாரண பெண்கள் வரை, தங்களுக்கு நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து 'மீடூ' என்கிற ஹாஷ்டாக் மூலம் பதிவிட்டு வெளியுலகிற்கு தெரியப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக இதன் மூலம் பல பிரபலங்களின் முகத்திரையும் கிழித்தது. இதனை தவறாக பயன்படுத்தி,  பிரபல மராத்தி நடிகர் சுபாஷ் யாதவ் என்பவருடன்  நடித்த ரோகிணி என்ற நடிகையும்  ஷாரா சரவான் என்கிற நடிகையும்,  பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி சமூக வலைதளத்தில் வெளியிடுவோம் என மிரட்டி, ரூபாய் 15 லட்சம் கொடுக்க வேண்டுமென கூறியுள்ளனர்.

இவர்களின் மிரட்டலுக்கு பயந்து சுபாஷ் யாதவ் ஆளுக்கு ஒவ்வொரு லட்சம் கொடுத்ததாக தெரிகிறது. மேலும் இந்த நடிகைகளின் செயலுக்கு போலீஸ் ஒருவரும் உடந்தையாக இருந்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் இவ்விரு நடிகைகளும், சுபாஷ் யாதவை தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதை தொடர்ந்து தன் மீது தவறு இல்லாததால் சுபாஷ் யாதவ், போலீசில் புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கையால் ரோகிணி மற்றும் ஷாரா சரவான் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த, போலீஸ் அதிகாரி ஒருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கம்பீரமாக எண்ட்ரி கொடுத்த பாஸ் கார்த்திக்- சூடுபிடிக்க தொடங்கிய கார்த்திகை தீபம்; கொண்டாடும் ஃபேன்ஸ்!
ஜன நாயகன் லேட்டஸ்ட் அப்டேட்: மீண்டும் ஒரு மெர்சல் மேஜிக்? இரண்டு கெட்டப்பில் மிரட்டப்போகும் விஜய்?