
எந்த நேரத்தில் நடிகை திரிஷா தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக கூறினார் என்று தெரியவில்லை.. தொடர்ந்து பல பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு வருகிறது.
சமீபத்தில் பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்ததாக கூறி பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதே போல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடிகை மடோனா செபாஸ்டியன் சமூக வலைத்தளம் சிலரால் ஹேக் செய்யப்பட்டதாகவும் அதில் வரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் எனவும் கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து நேற்று பிரபல நாயகி ஸ்ரீதேவியின் கணவர் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்துள்ளதாக கூறி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
தற்போது சின்னத்திரை தொகுப்பாளினி பாவனா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தை சிலர் ஹேக் செய்துள்ளதாக கூறியுள்ளார், ஏற்கனவே சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யாவின் ட்விட்டர் ஹேக் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.