பாவனா கடத்தல் வழக்கில் திருப்பம் - நடிகர் திலீப் கைதாவாரா?

 
Published : Jul 04, 2017, 02:35 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
பாவனா கடத்தல் வழக்கில் திருப்பம் - நடிகர் திலீப் கைதாவாரா?

சுருக்கம்

Twist in bavana kidnapping case - actor dhlip will arrested?

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் சிக்கியியுள்ள நடிகர் திலீப், அவரது மனைவி காவ்யா மாதவன் கைது செய்யப்படலாம் என்ற தகவல்  வெளியானதையடுத்து திலீப்பின் மனைவி அவரது தாயார், திலீப்பின் நண்பர் தலைமறைவானதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு முடிந்து விட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்த நடிகை பாவனாவை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டது தொடர்பாக பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இக்கடத்தல் சம்பவத்தில் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில் அதை அவர் மறுத்து வந்தார். 

இந்த நிலையில் திலீப்பின் புதிய படத்தின் படப்பிடிப்பு தளம் அருகே கடத்தல் வழக்கில் கைதான பல்சர் சுனில் நடமாடிய வீடியோ க்ளீப்பிங் ஒன்று கேரளா தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. திலீப் படப்பிடிப்புகளில் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். 

இதனையடுத்து காவ்யா மாதவனின் துணிக்கடையில் தடாலடியாக சோதனை நடத்தினார்கள். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. 

அடுத்தடுத்து ஆதாரங்கள் சிக்கியுள்ள நிலையில், பாவனா வழக்கை விசாரித்து வரும் குற்றப்பிரிவு ஐஜி தினேந்திர கஷ்யப் மற்றும் பாவனா பாலியல் துன்புறுத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக அவர்களை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில் காவ்யாமாதவனும் அவரது தாயாரும் நேற்று முதல் திடீர் என்று மாயமானதாக கூறப்படுகிறது. இவர்களது வீடு கொச்சியில் உள்ளது. இதனை தொடர்ந்து நேற்று காலை இருவரும் வீட்டில் இருந்து வெளியே சென்றனர். அதன் பின் இருவரும் வீடு திரும்பாததால் தலைமறைவாகியுள்ளதாத தெரிகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?