சட்டம் ஒழுங்கு சீர்குலையுமா?.... ரசிகர்களை கேவலப்படுத்திய ரஜினியை வெளுத்து வாங்கிய சீமான்....!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Feb 23, 2020, 01:37 PM IST
சட்டம் ஒழுங்கு சீர்குலையுமா?.... ரசிகர்களை கேவலப்படுத்திய ரஜினியை வெளுத்து வாங்கிய சீமான்....!

சுருக்கம்

ரசிகர்கள் குறித்த ரஜினியின் சர்ச்சை கருத்தால் கொதித்தெழுந்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது டுவிட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டாரை கிழி, கிழியென கிழித்துள்ளார். 

2018ம் ஆண்டு தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக கருத்து தெரிவித்தார். ரஜினியின் இந்த பேச்சு போராட்டக்காரர்களை கொதிப்படையச் செய்தது. இதையடுத்து சர்ச்சை பேச்சு குறித்து விளக்கம் அளிக்க கோரி, ரஜினிக்கு அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியது. 

இதையும் படிங்க: படுக்கையறையில் நண்பருடன் கிளுகிளுப்பு குத்தாட்டம் போட்ட ஷெரின்... வைரலாகும் வீடியோ...!

தான் நேரில் ஆஜரானால் தனது ரசிகர்கள் கூட்டம் கூடும், அதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்று தெரிவித்த ரஜினிகாந்த், நேரில் ஆஜராவதற்கு விலக்கு கோரியிருந்தார். ரஜினியை தலைவா, தலைவா என தலைமேல் வைத்து கொண்டாடும் ரசிகர்களை இப்படி கேவலப்படுத்தியது, பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது. 

இதையும் படிங்க: சும்மா கெத்தா.. செம்ம ஸ்டைலா... ஐதராபாத் விமான நிலையத்தை கலக்கிய நயன்தாரா..!

ரஜினி ரசிகர்கள் என்ன அவ்வளவு மோசமானவர்களா? வழக்கு விசாரணைக்கு ஆஜராக விலக்கு வேண்டும் என்றால் இப்படித்தான் ரசிகர்களை கேவலப்படுத்துவாரா? என கண்டமேனிக்கும் விமர்சனங்கள் வெடித்து எழுந்தன. இதையடுத்து ரசிகர்கள் குறித்த ரஜினியின் சர்ச்சை கருத்தால் கொதித்தெழுந்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது டுவிட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டாரை கிழி, கிழியென கிழித்துள்ளார். 

'போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்துவிட்டார்கள்' என்று சொல்ல தூத்துக்குடி சென்றபோது கெடாத சட்டம் ஒழுங்கு, விசாரணை ஆணையத்தில் ஆஜராகும்போது மட்டும் கெட்டுவிடுகிறதா?... ரசிகர்கள் கூடி சட்டம் ஒழுங்கு சீர்குலையுமென்றால், உங்கள் ரசிகர்கள் யார்?... இது எப்டி இருக்கு?! என ரஜினியை சகட்டுமேனிக்கு விமர்சித்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Vijay Movie Release : ஜனநாயகன் வரலேன்னு கவலைப்படாதீங்க! விஜய் ரசிகர்களுக்காக மீண்டும் ரிலீசாகும் மெர்சல் மற்றும் ஜில்லா!
Ethirneechal : ஆதி குணசேகரனுடன் கூட்டு சேரும் இராவணன்... ஜனனிக்கு செம ஷாக் வெயிட்டிங்