
கடந்த 1999ஆம் ஆண்டு பிரசாந்த் சிம்ரன் நடித்த ஜோடிகள் துணை வேடத்தில் தோன்றிய தெரிசா சில வருட காத்திருப்புக்குப் பிறகு 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் அதன் பிறகு சாமி கில்லி ஆறு என வெற்றிப் படங்களில் நடித்த இவர் தெலுங்கு வருஷம் , நுவ்வொஸ்தானந்தே நேனோடண்டனா மற்றும் அத்தாடு ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
கடந்த 2004ல் வெளியான வருஷம் படத்திற்காக பிலிம்பேர் விருதை தெலுங்கு நடிகையாக பெற்றுக்கொண்ட பின்னர் கடந்த 2010ல் பாலிவுட் கட்டா மீத்தாவில் அறிமுகமானார். இவர் "அபியும் நானும்'" "விண்ணைத்தாண்டி வருவாயா" ,"கொடி", "96" ஆகிய படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
தமிழைக் காட்டிலும் மலையாளம் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் கலக்கி வரும் திரிஷா ரஜினிகாந்தின் பேட்டை படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இவர் பிலிம்பேர் விருதுகள், சைமா விருதுகள் எடிசன் விருதுகள், நார்வே தமிழ் திரைப்பட விழா விருதுகள் மற்றும் ஆனந்தா உட்பட பல பாராட்டுகளைப் பெற்றார். தற்போது இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வனில் சோழ இளவரசியான குந்தவையாக நடித்து வருகிறார்.
முன்னணி நடிகையாக உள்ள திரிஷாவிற்கு கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் நிச்சயதார்த்த முடிவை சமூக வலைத்தளம் மூலம் இருவரும் வெகு விரைவில் அறிவித்தனர்.
சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து வரும் த்ரிஷா, தற்போது புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி மூன்று நிகழ்ச்சியில் பிரபலமாக இருந்த சந்தோஷ் நடிக்கவுள்ளார். அத்துடன் டான்ஸிங் ரோஸ் ஷபீரும் நடிக்க உள்ளார். அப்படக்குழுவினர் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. நேற்று நடைபெற்ற எலிமினேஷன் மூலம் வெளியேறிய சந்தோஷ், இன்று புதிய படத்தில் கமிட் ஆகியுள்ள புகைப்படம் ரசிகர்கள் வாழ்த்தை குவித்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.