Thamarai: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தாமரையை வீடு தேடி சந்தித்த முக்கிய பிரபலம்...வைரலாகும் புகைப்படம்..

Anija Kannan   | Asianet News
Published : Apr 25, 2022, 04:04 PM IST
Thamarai: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தாமரையை வீடு தேடி சந்தித்த முக்கிய பிரபலம்...வைரலாகும் புகைப்படம்..

சுருக்கம்

Thamarai: தாமரையை, பிக் பாஸ் பிரபலம் அனிதா சம்பத் தற்போது நேரில் சந்தித்து இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களை அனிதாசம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5:

பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் நம்பர் 1 தொலைக்காட்சி நிகழ்ச்சியாக உள்ளது. மக்களின் பொழுது போக்கிற்காக பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல், வழங்கப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் கலந்து கொண்ட நாடக கலைஞரான தாமரைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

பிக்பாஸ் அல்டிமேட்:

பிக் பாஸ் வெற்றியை தொடர்ந்து, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் என்ற OTTயில் பிரத்தேகமாக துவங்கப்பட்டது. தாமரை செல்வியுடன் சேர்த்து 14 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

சுமார் 70 நாட்கள் மட்டுமே நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் இறுதி வாரத்தில் தாமரை, ரம்யா பாண்டியன், நிரூப், பாலா ஆகிய 4 போட்டியாளர்கள் இருந்தனர். 5வது சீசனில் இருந்து தாமரைக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் இருந்தனர். 

ஏனெனில், தாமரை கலந்துகொண்ட முதல் சீசனிலேயே 98 நாட்கள் வரை வீட்டில் கடுமையாக விளையாடி இருந்தார். எனவே, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை ஜெயிக்கும் வாய்ப்பு இருப்பதாக மக்கள் நினைத்தார்கள்.  

ஆனால் அவருக்கு இந்த முறையில் டைட்டில் கிடைக்கவில்லை. இதில், கடுமையாக விளையாடி பாலாஜி அதிக வாக்குகளை பெற்று வின்னராக  அறிவிக்கப்பட்டுள்ளார்.இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தாமரைக்கு ஒரு வாரத்திற்கு 80 ஆயிரம் வரை சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

தாமரையை சந்தித்த அனிதா:

இந்நிலையில் தற்போது தாமரை திண்டுக்கல்லில் அவரது சொந்த ஊரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவரை பிக் பாஸ் பிரபலம் அனிதா சம்பத் தற்போது நேரில் சந்தித்து இருக்கிறார்.இது தொடர்பான புகைப்படங்களை அனிதாசம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் படிக்க...Soniya: 40 வயதில் இருந்து 18 வயதிற்கு திரும்பிய நடிகை சோனியா அகர்வால்...உடல் எடையை குறைத்து செம்ம ஃபிட் லுக்..

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

சிலம்ப‘அரசன்’ ஆட்டம் ஆரம்பம்... அதகளமாக தொடங்கிய அரசன் ஷூட்டிங் - எங்கு தெரியுமா?
கிரிஷ் விவகாரத்தில் யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த முத்து.. ஆடிப்போன மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்