
நடிகை திரிஷா இன்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தினர்.
திரிஷா ஜெயலலிதாவின் தீவிர ரசிகை என்று பல பேட்டியில் கூறியுள்ளார் , மேலும் ஒரு முறை சிறந்த நடிகைக்கான அவர் கையால் வாங்கிய விருதையும் பொக்கிஷமாக பாதுகாத்து வருவது குறிப்பிடதக்கது.
அவர் அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியார்களை சந்தித்து பேசினார் அப்போது பேசிய அவர், சில காரணங்களால் ஜெயலலிதா அவர்களுடைய இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் , அதனால் இப்போது அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் இழப்பு தமிழகத்துக்கே பேர் இழப்பு என்று கூறினார், மேலும் இந்த தமிழகம் ஒரு மகளை இழந்து விட்டது என உருக்கமாக கூறினார்.
மேலும் தற்போது திரிஷா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்தெடுத்து நடித்து வருவது குறிப்பிட தக்கது.
சமீபத்தில் திரிஷா அரசியல் வாதியாக நடித்து வெளிவந்த கொடி படத்தில், ஜெயலலிதாவை ரோல் மாடல்லாக தன் மனதில் நினைத்து கொண்டு தான் அந்த கதாபாத்திரத்தில் திரிஷா கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.