திருமணமான இரண்டே மாதத்தில் குட் நியூஸ் சொன்ன ரவீந்தர் - மகாலட்சுமி ஜோடி... குவியும் வாழ்த்துக்கள்

Published : Oct 29, 2022, 07:40 AM ISTUpdated : Oct 29, 2022, 07:41 AM IST
திருமணமான இரண்டே மாதத்தில் குட் நியூஸ் சொன்ன ரவீந்தர் - மகாலட்சுமி ஜோடி... குவியும் வாழ்த்துக்கள்

சுருக்கம்

ரவீந்தர் - மகாலட்சுமி ஜோடிக்கு திருமணமாகி இரண்டே மாதங்கள் ஆகும் நிலையில், தற்போது இருவரும் ஜோடியாக குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளனர்.

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் மகாலட்சுமி. இவருக்கும் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கும் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் திருமணம் நடைபெற்றது. இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பதால், ஆடம்பரம் இன்றி ரகசியமாக திருப்பதியில் குடும்பத்தினர் முன்னிலையில் இந்த ஜோடி திருமணம் செய்துகொண்டது.

திருமணம் ரகசியமாக முடிந்தாலும், அதனை அன்றே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ரவீந்தர். அவர் பதிவிட்ட புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி ஒரு புறம் வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும், மறுபுறம் மகாலட்சுமி அவரை காசுக்காக தான் திருமணம் செய்துகொண்டதாக விமர்சனங்களும் எழுந்தன.

இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக தொடர்ந்து பேட்டிகளை அளித்து வந்த இந்த ஜோடி, தாங்கள் இருவரும் காதலித்து தான் திருமணம் செய்துகொண்டதாக கூறி வந்தனர். குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் டிரெண்டிங் ஜோடியாகவே இவர்கள் மாறிவிட்டனர். ஏனெனில் இவர்கள் எந்த விஷயம் செய்தாலும் அது வைரல் ஆகி விடுகிறது.

இதையும் படியுங்கள்... லைகாவுடன் 2 படம் பட்டையை கிளப்பும் சூப்பர் ஸ்டார்...எப்ப பூஜை தெரியுமா?

அந்த வகையில் திருமணமாகி இரண்டே மாதங்கள் ஆகும் நிலையில், தற்போது இருவரும் ஜோடியாக குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளனர். அது என்னவென்றால், இந்த ஜோடி புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளது. அந்த காரின் விலை இந்திய மதிப்பில் ரூ.35 லட்சத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

கார் வாங்கியபோது எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ரவீந்தர், “வாழ்க்க முழுக்க நாம நேசிக்கிற மாதிரி ஒரு நபர் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். அப்டி நேசிக்கிற நபர் நமக்கு பொண்டாட்டியா வந்தா... அது பெரிய அதிர்ஷ்டம். அப்டி நமக்கு கிடச்ச பொண்டாட்டிய கூட்டிட்டு சுத்த சொர்க்கம் மாதிரி ஒரு கார் கிடச்சா...” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... பொம்பள சோக்கு கட்டாயம் தேவை ...வெளிப்படையாக பேசிய பப்லூ பிரிதிவீராஜ்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

திருமண நேரத்தில் 'நான் வாழ்வதே உங்களால்' என உருகிய ராஷ்மிகா: என்ன காரணம் தெரியுமா?
தமிழ் ரசிகர்களின் 'கனவுக்கன்னி'க்கு அடித்த ஜாக்பாட்! பாலிவுட் செல்லும் ருக்மிணி வசந்த்!