தயாரிப்பாளர் தேர்தலில் களம் இறங்கும்  டி.ராஜேந்தர்.....!!!

Asianet News Tamil  
Published : Dec 27, 2016, 03:17 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
தயாரிப்பாளர் தேர்தலில் களம் இறங்கும்  டி.ராஜேந்தர்.....!!!

சுருக்கம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது கலைப்புலி எஸ்.தாணு , டி.சிவா, ராதாகிருஷ்ணன், கதிரேசன், தேனப்பன் ஆகியோர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது.

இந்நிலையில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வரும் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்.

இந்த தேர்தலில் மூன்று அணிகள் போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 

அதில் ஒரு அணியில் டி.ராஜேந்தர் தலைவர் பதவிக்கும் ஏ.எம்.ரத்னம், ஏ.எல்.அழகப்பன் துணைத்தலைவர் பதவிக்கும், கேயார், கதிரேசன் செயலாளர் பதவிக்கும், போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது அணியில் டி.சிவா, தனஞ்செயன் ஆகியோர்களும், மூன்றாவது அணியில் ராதாகிருஷ்ணன், சிவசக்தி பாண்டியன், தேவயானி ஆகியோர்களும் போட்டியிடுவார்கள் என தெரிகிறது.

இந்த தேர்தலில் நிற்க விரும்புபவர்கள் வரும் 8 முதல் 12ஆம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். 13ஆம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் செய்ய கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளதூ. ஜனவரி 18ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரோகிணியின் ஆட்டம் ஆரம்பம்... சொத்தை பிரிக்க சொல்லி சண்டை போடும் மனோஜ் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
ஜனநாயகன் ஆடியோ லாஞ்சில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி... அடடே இதைவச்சு ஒரு ஃபீல் குட் படமே எடுக்கலாமே..!