என் மகனை வைத்து படம் எடுங்க ‘நேரத்திற்கு ஷூட்டிங் வரச்சொல்றேன்’... சிம்புவை கேட்காமல் வாக்கு கொடுத்த டி.ஆர்!?

 
Published : Nov 19, 2017, 04:23 PM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
என் மகனை வைத்து படம் எடுங்க ‘நேரத்திற்கு ஷூட்டிங் வரச்சொல்றேன்’... சிம்புவை கேட்காமல் வாக்கு கொடுத்த டி.ஆர்!?

சுருக்கம்

TR promises to producer Kalaippuli S Dhanu

‘நேரத்திற்கு மகனை ஷூட்டிங் வரச்சொல்றேன்’ என்று சிம்புவின் தந்தையும் நடிகருமான டி.ராஜேந்தர் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிற்கு வாக்குறுதி கொடுத்துள்ளாராம்.

சிம்பு நடிப்பில் திரிஷா இல்லனா நயன்தாரா இயக்குனரின் இயக்கத்தில் வெளியான கில்மா டைப் படமான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம், பயங்கர பிளாப். சிம்புவின் சினிமா கெரியரே காலியாகிவிடும் என்ற அளவுக்கு வலைதளங்களில் ஏகப்பட்ட கமெண்ட்ஸ்.

ஆனால், அவரின் அடுத்த படம் குறித்த ஏகப்பட்ட தகவல்களும் வந்துகொண்டுதான் இருந்தன. இதனால் கடுப்பான சிம்பு, ‘என்னைப்பற்றி எழுதுவதை தயவுசெய்து நிறுத்துங்கள்’ என்று ட்விட்டரில் கொதித்தெழுந்தார். இதன் பிறகு தான் இயக்கம் மல்டி ஸ்டார் மூவியில் நடிக்க மணிரத்னம் அழைத்தார்.

அதன்பிறகு கலைப்புலி எஸ்.தாணு சிம்புவை வைத்து ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம். சக்ஸஸ் தயாரிப்பாளரான கலைப்புலி தாணு  டி.ராஜேந்தர் கேட்டுக் கொண்டதற்காக இந்த முடிவை எடுத்துள்ளாராம்.

அதுமட்டுமல்லாமல், ‘நேரத்திற்கு மகனை ஷூட்டிங் வரச்சொல்றேன்’ என்று வாக்குறுதி  கொடுத்திருக்கிறாராம். கலைப்புலி தாணு ஏற்கனவே சிம்புவை வைத்து ‘தொட்டி ஜெயா’ படத்தைத் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கதற கதற அடிவாங்கிய கடத்தல்காரர்கள்... கிரிஷை காப்பாற்றினாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!