
விஜயின் மெர்சல் திரைப்படத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவது குறித்து சென்னையில் விலங்குகள் நல வாரியம் அவசர ஆலோசனையை தொடங்கியுள்ளது.
விஜய் நடிப்பில், 'மெர்சல்' திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கபட்ட நிலையில், படத்தில் விஜய் ஒரு காட்சியில் பயன்படுத்தும் புறா கிராபிக்ஸ் என்னும் ஆதரங்களை தராமல் விலங்குகள் நல வாரியத்திற்கு டிமிக்கி கொடுத்து வந்தது மெர்சல் படக்குழு. அதனால் இருந்து தடை இல்லாச் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மெர்சல் திரைப்படம் ரிலீஸ் ஆவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. எனவே, இதுகுறித்து முடிவெடுக்க விலங்குகள் நல வாரியம் இன்று அவசரக் கூட்டத்தை சற்று முன் கூட்டியது.
தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டதில் இருந்து 'மெர்சல்' படத்துக்குப் பல தடைகள் வந்த வண்ணம் இருகிறது. 'மெர்சல்' தலைப்புக்கு வந்தது முதல் சிக்கல். நீதிமன்றம் வரை சென்று தலைப்புக்கு தடை நீக்கப்பட்டது, தியேட்டர் பிரச்னை தொடங்கியது.
கேளிக்கை வரியைக் குறைக்கும் வரை புதிய படங்கள் வெளியாகாது என அறிவிப்பு வெளியானது. இதனால் மீண்டும் 'மெர்சல்' படம் வெளியாகுமா? என்ற சந்தேகம் வந்தது. எப்படியும் எல்லா தடைகளையும் தகர்த்தெறிந்து தளபதி படம் வரும் என தயாரிப்பாளர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, கேளிக்கை வரி பிரச்னையும் முடிந்தது. இந்நிலையில், படத்துக்கு புதிய சிக்கலாக விலங்குகள் நல வாரியம் புறா மூலம் செக் வைத்தது. இந்தச் சிக்கலை சரிசெய்ய தயாரிப்பாளர் தரப்பு விஜயை முதல்வரிடம் உதவியை நாடினால் படம் ரிலீஸ் ஆவதில் இருக்கும் சிக்கலை சமாளித்து விடலாம் என ஐடியா கொடுத்தார்களாம்.
இந்நிலையில் நேற்று தமிழக முதல்வர் பழனிசாமியை சந்தித்து பிரச்சனையை எடுத்து கூறினாராம். இதனைத்தொடர்ந்து, இன்று காலை 10 மணி அளவில் 'மெர்சல்' பிரச்னை குறித்து விலங்குகள் நல வாரியம் ஆலோசிக்க கூட்டத்தை தொடங்கியுள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய், நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'மெர்சல்'. இந்த படத்தை சுமார் ரூ.140 கோடி செலவில் தேனாண்டாள் பிலிம்ஸ் மிக பிரமாண்டமாக தயாரித்து உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.