
நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் திரையுலகில் தொன்று தொட்டு இருந்து வருகிறது என்றும் படுக்கைக்கு செல்வது அவரவர் விருப்பம், யாரும் யாரையும் கட்டாயப்படுத்துவது இல்லை என்று கூறியுள்ள நடிகரும் பாஜக எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹா எனக்கு நீ உதவினால் நான் உனக்கு உதவுவேன் என்ற கான்சப்ட் தான் இங்கு உள்ளது என அதிரடியாக தெரிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியால் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பாலியல் வன்மங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்தி, தெலுங்கு, மலையாள நடிகைகள் பலர் தங்களுக்கும் இந்த அனுபவங்கள் ஏற்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டு வருகிறார்கள்
இந்த நிலையில் இந்தி பட உலகின் முன்னணி நடன இயக்குனரான சரோஜ்கான், பட உலகில் படுக்கைக்கு அழைப்பது நடிகைகள் சம்மதத்துடன்தான் நடக்கிறது என்றும். இதனால் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் கிடைத்து அவர்கள் வாழ்க்கை மேம்படுகிறது என்றும் பரபரப்பு கருத்தை வெளியிட்டார்.
இந்த நிலையில் பிரபல இந்தி நடிகரும் பா.ஜனதா கட்சி எம்.பியுமான சத்ருகன் சின்ஹாவும் சினிமாவில் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பட உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதும் அதற்கு சிலர் விரும்பி செல்வதும் காலம் காலமாக இருக்கிறது என கூறினார்.
எனக்கு நீ உதவினால் உனக்கு நான் உதவுவேன் என்பதுதான் அது. இதில் ஆத்திரப்படுவதற்கு எதுவும் இருப்பதாக தெரியவில்லை என அவர் குறிப்பிட்டார்
படுக்கைக்கு அழைப்பது சம்பந்தமாக நடன இயக்குனர் சரோஜ்கான் கூறிய கருத்தை நான் ஏற்கிறேன். பிரபல நடிகைகள் ரேகா, ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித் ஆகியோரின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தவர்அவர் என்றும் சத்ருகன் சின்ஹா குறிப்பிட்டார்.
சரோஜ் கான் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். சினிமாவில் வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைப்பதை நான் தெரிந்து வைத்து இருப்பதுபோல் அவரும் அறிந்து இருப்பார்.
ஒருவேளை சரோஜ்கான் கூட கஷ்டப்பட்டு இருக்கலாம். படுக்கைக்கு அழைப்பதை நான் நியாயப்படுத்தவில்லை. உண்மையை பேசிய சரோஜ்கானை யாரும் எதிர்க்க வேண்டாம். இந்த வழக்கத்தை உருவாக்கியவர்களை கண்டியுங்கள். படுக்கைக்கு செல்வது அவரவர் விருப்பம். யாரும் யாரையும் கட்டாயப்படுத்துவது இல்லை என சத்ருகன் சின்ஹா அதிரடியாக கருத்துத் தெரிவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.