
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் பட்டியலில் இருப்பவர் அஜித். இவருக்கு உலக அளவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். எனவே இவர், எந்த தகவலை வெளியிட்டாலும் அதனை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சமீப காலமாக ரசிகர்களுக்கு கருத்து கூறும் வகையில் ஏதேனும் தகவல்களை வெளியிட்டு வரும் அஜித் இந்த முறை வெளியிட்டுள்ள அறிக்கை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அஜித் எந்த ஒரு சமூக வலைதளத்திலும் இல்லாததால், ரசிகர்களுக்கு சொல்ல வேண்டிய விஷயங்களை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலம்தான் தெரிவித்து வருகிறார். அந்த வகையில் இந்த தகவலையும் சுரேஷ் சந்திரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது, "உங்களை சுற்றி நெகட்டிவிட்டியோ.. டிராமாவோ.. இல்லாத நபர்களை வைத்துக் கொள்ளுங்கள். ஊக்கப்படுத்த கூடிய இலக்கை நிர்ணயித்து கொள்ளுங்கள். பொறாமைக்கோ.. வெறுப்புக்கோ.. நேரமில்லை. உங்களது சிறப்பான பணியை மட்டும் கைவிடாதீர்கள் என அஜித் கூறியுள்ளார்.
இந்த அறிக்கை தற்போது அஜித் ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. அஜித் தற்போது மூன்றாவது முறையாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் 'துணிவு' படத்தில் நடித்துள்ளார். வங்கி கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை தொடர்ந்து அஜித், நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தன்னுடைய அடுத்த படத்தை நடிப்பார் என கூறப்பட்ட நிலையில், தற்போது அஜித் மீண்டும் பைக் பயணத்தை தொடர முடிவு செய்துள்ளதாக கூறப்படுவதால், இந்த படத்தின் படப்பிடிப்பு... சற்று தாமதமாக தொடங்க வாய்ப்புள்ளது. எனினும் விரைவில் அஜித்தின் அடுத்ததாக என்ன முடிவு செய்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.