
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் தளபதி விஜய்க்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தி இருந்த படம் தான் "துள்ளாத மனமும் துள்ளும்", இந்தப்படம் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது. கிராமப்புறங்களிலும் விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தியது.
அதுமட்டுமல்ல, தற்போது விஜயின் கோட்டையாக விளங்கும் கேரளாவில் விஜய்க்கு மிக பெரிய மார்க்கெட்டை உருவாக்கிய படமும் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இயக்குனர் எழில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சில சுவாரஷ்ய தகவல்களை வெளியிட்டுள்ளார். அதாவது எழில் முதலில் இந்த படத்திற்கு "ருக்குமணிக்காக" என்று தான் டைட்டில் வைக்க இருந்துள்ளார்.
அதன் பின்னர் இப்படத்தின் தயாரிப்பாளர் "பார்த்தாலே பசி தீரும்" இப்படியான ஸ்டைலில் தலைப்பு வேண்டும் என கேட்டுள்ளார். இதனையடுத்து தான் இப்படத்திற்கு எழில் "துள்ளாத மனமும் துள்ளும்" என வைத்ததாக கூறியுள்ளார்.
இந்நிலையில் துள்ளாத மனமும் துள்ளும் படம் வெளியாகி 22 வருடங்களுக்கு பிறகும் அதன் மவுசு குறையவில்லனு . இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு விஜய் - சிம்ரன் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படம் கேரளாவில் நாளை(டிசம்பர் 19) மீண்டும் திரைப்படவுள்ளது. இந்த தகவலை நோட்டிஸுடன் பதிவிட்டுள்ள நடிகை சிம்ரன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ரொமாண்டிக் ஹீரோவாக 90 களில் வளம் வந்த விஜயின் படம் இன்றும் ரசிகர்களை கவர்ந்த வண்ணமே உள்ளது. இந்த படத்தின் பாடல்கள் ஏறும் மனதில் இனிப்பவையாகவே உள்ளன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.