vijay sethupathi photoshoot :தெருக்கூத்து கலைஞன்..மக்கள் செல்வன் எடுத்துள்ள புதிய முயற்சி...எதற்கு தெரியுமா?

Kanmani P   | Asianet News
Published : Dec 18, 2021, 09:14 AM IST
vijay sethupathi photoshoot :தெருக்கூத்து கலைஞன்..மக்கள் செல்வன் எடுத்துள்ள புதிய முயற்சி...எதற்கு தெரியுமா?

சுருக்கம்

vijay sethupathi photoshoot : பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள விஜய் சேதுபதி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். தெருக்கூத்து கலைஞன் போல வேடமிட்டுள்ள மக்கள் செல்வனின் வீடியோ வைரலாகி வருகிறது.

ரசிகர்களால் மக்கள் செல்வம் என்று அன்பாக அழைக்கப்படும் விஜய் சேதுபதி கூத்துப்பட்டறையில் கணக்காளராக பணியில் சேர்ந்து அங்கு கிடைத்த அறிமுகத்தின் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார். பெண் என்ற தொலைக்காட்சித் தொடரை தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்காக பல குறும்படங்களில் நடித்துள்ளார். பீட்சா பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து பல குறும்படங்களில் பணியாற்றியுள்ளார் விஜய் சேதுபதி. இதையடுத்து சிறந்த நடிகருக்கான விருதை நார்வே குறும்பட தமிழ்த் திரைப்பட விழாவில் பெற்றார்.

இதன் பின்னர் குறும்பட இயக்குனர் சுப்புராஜுவின் முதல் படமான பீட்சாவில் நாயகனாக அறிமுகமானார் விஜய் சேதுபதி. முன்னதாக  இவர்  புதுப்பேட்டை படத்தில் தனுசுக்கு நண்பனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றிருந்தார்.

பீட்சா பட வெற்றிக்கு பிறகு 'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' படத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார் விஜய் சேதுபதி.

இதை தொடர்ந்து பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை, றெக்க, விக்ரம் வேதா, கருப்பன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் வெற்றியடைந்தது. இதைத்தொடர்ந்து திருநங்கை வேடமிட்டு சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதி பல விருதுகளை தட்டி சென்றார்.

நாயகனோடு நிறுத்தி கொள்ளாமல் வில்லன், சிறப்பு தோற்றம் என தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக வந்த மக்கள் செல்வன்  மாஸ்டர் படத்தில் மாஸ் வில்லனாக வந்து மிரட்டி இருந்தார்.

தமிழோடு மற்ற மொழி படங்களிலும் நடிக்கும் விஜய் சேதுபதி கடந்த 2019 ஆம் ஆண்டு சாய் ரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இதுவே இவரின் முதல் தெலுங்கு திரைப்படமாகும். 

இந்நிலையில் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள விஜய் சேதுபதி போட்டொ ஷூட் நடத்தியுள்ளார். தெருக்கூத்து கலைஞன் போல வேடமிட்டுள்ள மக்கள் செல்வனின் வீடியோ வைரலாகி வருகிறது

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!