பெண்களிடம் ஆபாச பேட்டி... யூ-டியூப் சேனலைச் சேர்ந்த 3 பேர் கைது...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jan 12, 2021, 10:58 AM IST
பெண்களிடம் ஆபாச பேட்டி... யூ-டியூப் சேனலைச் சேர்ந்த 3 பேர் கைது...!

சுருக்கம்

இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

யூ-டியூப் சேனல்களால் நாளுக்கு நாள் பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களைப் போன்றே யூ-டியூப்பிலும் தனி மனிதனை தரக்குறைவாக விமர்சிப்பது, தேவையில்லாத மார்ப்பிங் வீடியோக்கள், போலி ஆடியோக்களை பதிவேற்றுவது போன்ற ஆபாசமான செயல்கள் அரங்கேறி வருகின்றன. சமீபத்தில் பிக்பாஸ் வனிதாவை தன்னுடை யூ-டியூப் சேனலில் தரக்குறைவாக விமர்சித்ததற்காக சூர்யாதேவி என்பவர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே வந்தார். அதற்கு முன்னதாக கந்த சஷ்டி கவசத்தை தரக்குறைவாக விமர்சித்ததாக கறுப்பர் கூட்டம் யூ-சேனல் வீடியோக்கள் டெலிட் செய்யப்பட்டு, கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. தற்போது மற்றொரு பிரச்சனை சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

கொரோனா லாக்டவுனால் 2020ம் ஆண்டு எப்படி போனது என சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இளம் பெண்களிடம் யூ-டியூப் சேனல் ஒன்று பேட்டி எடுத்தது. அதில் ஒரு பெண்ணிடம் எடுக்கப்பட்ட பேட்டி மிகவும் ஆபாசமாக இருந்துள்ளது. இதுகுறித்து பெசன்ட் நகரைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண் அந்த யூ-டியூப் சேனல் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். 

இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தற்போது பெண்ணிடம் ஆபாச பேட்டி எடுத்து அதை தவறாக எடிட் செய்து பதிவேற்றியதாக சென்னை டாக் என்ற யூ-டியூப் சேனலின் தொகுப்பாளர் அசென் பாட்ஷா, கேமராமேன் அஜய் பாபு, அந்த சேனலின் உரிமையாளரான தினேஷ் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?