அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவேன்... பிரபல நடிகரின் மகளை மிரட்டிய இளைஞர்! அதிரடி கைது!

Published : Aug 01, 2020, 11:57 AM IST
அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவேன்... பிரபல நடிகரின் மகளை மிரட்டிய இளைஞர்! அதிரடி கைது!

சுருக்கம்

பிரபல நடிகரின் மகள் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என, பணம் கேட்டு மிரட்டிய,  இளைஞர் ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

பிரபல நடிகரின் மகள்  அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என, பணம் கேட்டு மிரட்டிய,  இளைஞர் ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் பிரபல நடிகர் மகளின் அந்தரங்க புகைப்படங்களை, வெளியிட உள்ளதாக இளைஞர் ஒருவர், அந்த பெண்ணுக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், தயவு செய்து அப்படி வெளியிட்டு விட வேண்டாம், தன்னிடம் 10 முதல் 15 ஆயிரம் வரை மட்டுமே பணம் உள்ளதாக நடிகரின் மகள் அவனிடம் கெஞ்சியுள்ளார். ஆனால் இவர் நடிகர் மகள் என்பதால் , அதிக தொகையை அந்த இளைஞர் எதிர்பார்த்தார்.

தொடர்ந்து வந்த மிரட்டலால்... இதுகுறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். மேலும் இது குறித்து போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. சைபர் கிரைம் போலீசார், நடிகரின் மகளுக்கு வந்த அழைப்புகளை சோதனை செய்ததில் மிரட்டல் விடுத்த நபர் யார் என்பதை கண்டுபிடித்து  இது குறித்து விசாரணை செய்து அந்த இளைஞரை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

மேலும் நடிகரின் மகள் படிக்கும் கல்லூரியில் தான், கைது செய்யப்பட்ட இளைஞரின் தங்கையும் படிக்கிறார் என்கிற தகவல் தெரியவந்துள்ளதால், இந்த சம்பவத்திற்கும் அவருக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தில் சிக்கிய நடிகரின் மகள் கல்லூரி மாணவி என்பதால், அவர் பெயர் மற்றும் மற்ற விவரங்களை போலீசார் வெளிப்படுத்தாமல் ரகசியம் காத்து வருகிறார்கள்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?