அட கடவுளே "OREO"பிஸ்கட் கிரீமில் மெழுகா?!! குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் "OREO" வைரலாகும் வீடியோ உள்ளே

Kanmani P   | Asianet News
Published : Dec 05, 2021, 12:36 PM ISTUpdated : Dec 05, 2021, 12:48 PM IST
அட கடவுளே "OREO"பிஸ்கட் கிரீமில் மெழுகா?!! குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும்  "OREO" வைரலாகும்  வீடியோ உள்ளே

சுருக்கம்

OREO: குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ஓரியோ பிஸ்கேட் க்ரீமில் மெழுகு போன்ற பொருள் இருந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் அமோக விற்பனை ஆகி வரும் சேன்விஜ் குக்கியில் முதல் இடம் பிடித்திருப்பது ஓரியோ தான். அமெரிக்காவை சேர்ந்த    Mondelez International தயாரிப்பான இந்த குக்கி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் நொறுக்கு தீனியாக உள்ளது.

1912-ம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட 102 வருடங்களாக உலகம் முழுவதும் விற்பனையாகி வரும் இந்த பிஸ்கேட் உலகின் நம்பர் ஒன் குக்கியாக உள்ளது. வெறும் குக்கியாக மட்டுமல்லாமல் நமது இல்லத்தரசிகள் இதை வைத்து கேக், சேன்விஜ், ஐஸ்கிரீம்  என விதவித உணவு பொருட்களை வேறு கண்டுபிடித்து குழந்தைகளுக்கு கொடுத்து வருகின்றனர்.

இப்படி அனைவராலும் அறியப்பட்ட OREO-வில்  வைக்கப்பட்டிருக்கும் கிரீமில் மெழுகு போன்ற பொருள் இருப்பதாக வெளியான வீடியோ அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் வேற எங்கையும் இல்லைங்க நம்ம சென்னையில் உள்ள கடையில் வாங்கப்பட்ட OREO-ல் தான் இருந்திருக்கிறது.

ஏற்கனவே பிரபல maggi noodles -ல் கலக்கப்படும் ரசாயம் குழந்தைகளுக்கு பேராபத்தை விளைவிக்க கூடும் என  தெரியவந்ததால் அந்த நூடுல்ஸ் விற்பனையை பல நாடுகள் தடை  செய்திருந்தன. பின்னர்  ரசாயன கலப்பின்றி நூடுல்ஸ் செய்வதாக maggi noodles நிறுவனம் தெரிவித்ததை தொடர்ந்து மீண்டும் பல நாடுகளில் maggi noodles அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குழந்தைகளின் பேவரட்டாக இருக்கும் OREO biscuit-ல் உள் வைக்கப்பட்டிருக்கும் கிரீமில் ஊதா நிற "மெழுகு போன்ற பொருள்" கிடைத்துள்ளது. பார்ப்பதற்கு மெழுகு துகள் போல் காட்சியளிக்கும் இந்த பொருள் இரண்டு பிஸ்கேட்டுகளுக்கு இடையில் மறைந்திருக்கும் கிரீமில் இருந்தது பெற்றோர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

"

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!