Arya won Award: இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு ஆர்யாவுக்கு கிடைத்த விருது ; எந்த படத்திற்கு தெரியுமா ?

Kanmani P   | Asianet News
Published : Dec 05, 2021, 11:28 AM ISTUpdated : Dec 05, 2021, 11:34 AM IST
Arya won Award: இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு ஆர்யாவுக்கு கிடைத்த விருது ; எந்த படத்திற்கு தெரியுமா ?

சுருக்கம்

Arya won the Best Actor Award : 15வது ஆண்டு அயோத்தி திரைப்பட விழாவின் ஆர்யா சிறந்த நடிகருக்கான விருதை  பெற்றுள்ளார். இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஆர்யா.

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் வெட்டி இளைஞராக நடித்ததும் சரி நான் கடவுள் படத்தில் அகோரியாக நடித்ததும் சரி தனக்கென தனி பாணியில் முழு அற்பணிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஆர்யா.

இவர் கடந்த 2019 -ம் ஆண்டு நடித்திருந்த மகாமுனி படத்தை  மௌனகுரு திரைப்படத்தினை இயக்கி திரையுலகில் அறிமுகமான சாந்தகுமார்  சுமார் 8 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் தனது ரீஎண்ட்ரியாக இதனை  இயக்கியிருந்தார். இதில் ஆர்யாவுடன், இந்துஜா, மஹிமா நம்பியார் உள்ளிட்டோரின் அதிரடி நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.  இத்திரைப்படத்தினை கே.இ.ஞானவேல் ராஜா தனது ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார். இதற்கான இசையை , இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். அதிரடி மற்றும் திரில்லர் படமான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன் மற்றும் பட தொகுப்பாளர் ஷாப்பு ஜோசப் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

பெற்றோரின் தீயதும் நல்லதும் பிள்ளைகளையே சேரும் என்னும் கதை கருவை கொண்ட இந்த படத்தில் ஆர்யா மகாராஜன் (மகா), முனிராஜன் (முனி) என்னும் பெயர் கொண்டு இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். வெவ்வேறு கோணத்தில் வெவ்வேறு வாழ்க்கையினை வாழும் ஒத்த உருவம் கொண்ட இரட்டையர்கள் பிரச்சனையை எவ்வாறு எதிர்கொள்கின்றனர். என்பதே படத்தின் கதை.

இந்த படத்தில் தனது ஆக்கபூர்வமான நடிப்பை வெளிப்டுத்தியிருந்த ஆர்யாவுக்கு தற்போது சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.  15வது ஆண்டு அயோத்தி திரைப்பட விழாவின் ஆர்யா சிறந்த நடிகருக்கான விருதை  பெற்றுள்ளார். இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஆர்யா.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!