
பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமையன்று, போட்டியாளர்கள், தாங்கள் வெளிட்ட நினைக்கும் இரண்டு பிரபலங்கள் பெயரை கூறி, நாமினேஷன் செய்வார்கள். அதிலும் இந்த வாரம் வாரம் ஒப்பன் நாமினேஷன் நடைபெற்றது. இதன் மூலம் சிலர் மனதில் பூட்டி வைத்திருந்த வஞ்சம் வெளியே வந்தது.
அந்த வகையில் சாக்சி, சரவணன் - கவின் ஆகிய இருவரின் பெயரை நாமினேட் செய்தார். இவரை தொடந்து மதுமிதா, கவின் - சாக்சி பெயரையும், லாஸ்லியா, மதுமிதா- சாக்சி பெயர்களை நாமினேட் செய்தார். இவர்களை தொடர்ந்து ஷெரின், கவின் - லாஸ்லியா பெயரை நாமினேட் செய்தார். ரேஷ்மா சேரன் - கவின் பெயர்களையும், கவின், ரேஷ்மா - மதுமிதா பெயரையும், சேரன் கவின் - ரேஷ்மா பெயர்களையும் கூறினார். சாண்டி, யாரும் எதிர்பாராத விதமாக மதுமிதா- அபிராமி பெயரையும், முகேன், ரேஷ்மா- மதுமிதா பெயரை கூறினார். அபிராமி, கவின்- மதுமிதா பெயரையும், சரவணன், சாக்சி - அபிராமி பெயரையும் தர்ஷன், மதுமிதா - ரேஷ்மா பெயர்களையும் கூறினர்.
இதில் அதிக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டுள்ள, மதுமிதா, கவின், ரேஷ்மா, சாக்சி மற்றும் அபிராமி ஆகியோர் இந்த வருடம் நாமினேட் லிஸ்டில் இடம்பெற்றுள்ளனர். இந்த ஐந்து பேரில் யார் வெளியேறுவார் என்பது அவர்கள் இந்த வாரம் நடந்து கொள்ள போவதை வைத்தே, மக்கள் முடிவு செய்வார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.