
ஆரி கடந்த வார கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், இந்த வாரம் முடிவடைய உள்ளதால் அவரது பதவி காலமும் முடிவடைய உள்ளது. எனவே பிக்பாஸ் வீட்டின் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் படலம் தான் இன்றைய முதல் புரோமோவாக வெளியாகியுள்ளது.
இந்த வாரம் யார் தலைவராக மாறலாம் என, போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து, நாமினேட் செய்கிறார்கள். கடந்த வாரத்திற்கு முந்தய வாரம், பாலாஜியால் சோம் சேகர் தலைவராவது மிஸ் ஆனதால் என்னவோ, கடந்த இரு வாரமாகவே சோம் சேகரை தலைவராக்க முயற்சி செய்து வருகிறார்.
ஷிவானி, ரமேஷ் ஆகியோர் நிஷாவை நாமினேட் செய்கிறார்கள். நிஷாவை தனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் அவர் கேப்டனாக வந்தால் தனக்கு மகிழ்ச்சி என்றும் ஷிவானி கூறினார். சோம் சேகரை நாமினேட் செய்து போர் அடித்து விட்டதால் நிஷாவை நாமினேட் செய்வதாக கூறினார் ரமேஷ். ரம்யா, ஆரி மற்றும் சோம் ஆகியோர் கேப்ரில்லாவை கேட்பனாக்க நாமினேட் செய்தனர். அதேபோல் ஆஜித்தையும் ஒருசிலர் கேப்டனுக்கு நாமினேட் செய்தனர்.
மொத்தத்தில் இந்த நிலையில் இந்த வார கேப்டன் டாஸ்க்கில் நிஷா, சோம், கேப்ரில்லா மற்றும் ஆஜித் ஆகிய நால்வர் நாமினேஷன் செய்யப்படுவார்கள் என தெரிகிறது. இவர்களில் ஆஜித் மற்றும் கேப்ரில்லா ஆகிய இருவரும் கேப்டன் டாஸ்க்கில் அதிக போட்டி நிலவ வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்த வார கேப்டனாக இளசுகள் தேர்வு செய்யப்படுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.