இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவது இவரா?

Published : Sep 14, 2019, 05:12 PM IST
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவது இவரா?

சுருக்கம்

பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் உள்ளே வந்த நாள் முதல், பல பிரச்சனைகள் மற்றும் சந்தோஷமான தருணங்கள் வந்து சென்றிருந்தாலும், இந்த வாரம் அனைவரும், அவரவர் குடும்பத்தை பார்த்து, சந்தோஷப்பட்டதற்கு அளவே இல்லை.  

பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் உள்ளே வந்த நாள் முதல், பல பிரச்சனைகள் மற்றும் சந்தோஷமான தருணங்கள் வந்து சென்றிருந்தாலும், இந்த வாரம் அனைவரும், அவரவர் குடும்பத்தை பார்த்து, சந்தோஷப்பட்டதற்கு அளவே இல்லை.

மற்ற பிரபலங்கள் அவர்களுடைய பெற்றோரை, மனைவியை, நண்பர்களை 80 நாட்கள் கழித்து தான் பார்த்தார்கள். ஆனால் லாஸ்லியாவோ... தன்னுடைய தந்தையை 10 வருடங்கள் கழித்து பார்த்தார். எனவே அவர் வந்து சென்ற நினைவுகளையும், அவர் அனுபவித்த சந்தோஷத்தையும் விவரிக்க வார்த்தைகளே இல்லை.

அதே போல் அனைவரும், தங்களுடைய குடும்பத்தை பார்த்து மகிழ்ச்சியாக இருந்தாலும், அந்த பாக்கியம் கவினுக்கு மட்டும் கிடைக்கவில்லை. கவினை பார்க்க அவர் நண்பர் மட்டுமே உள்ளே வந்து சென்றார். அதே போல்... அவர் கன்னத்தில் விட்ட அறையையும் அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.

மற்ற வாரங்களை விட இந்த வாரம் போட்டியாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக சென்றாலும், இந்த வாரம் எலிமினேஷன் உள்ளது என்பது  சற்று கஷ்டமான விஷயம் தான். கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட சேரன், ரகசிய அறையில் வைக்கப்பட்டு மீண்டும் உள்ளே வந்ததால், இந்த வாரம் ஒருவர் வெளியில் செல்வது உறுதி.

அந்த வகையில் இந்த வாரம், நடிகை வனிதா.. வெளியே செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஷெரின் விஷயத்தில் வனிதா மிகவும் அவதூறாக பேசியதே வனிதாவுக்கு இந்த வாரம் குறைந்த வாக்குகள் கிடைக்க வழி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!