அஜீத்-ன் ”விசுவாசம்” படத்தில் இணைகிறார், ”தீரன் அதிகாரம் ஒன்று” படத்தின் பிரபலம்;

 
Published : Jun 08, 2018, 11:42 AM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
அஜீத்-ன் ”விசுவாசம்” படத்தில் இணைகிறார், ”தீரன் அதிகாரம் ஒன்று” படத்தின் பிரபலம்;

சுருக்கம்

this stunt master going to join in ultimate stars upcoming movie

சிறுத்தை சிவா இயக்கத்தில், விவேகம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அஜீத் நடித்துவரும் படம்  ”விசுவாசம்”. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் வைத்து தொடங்கி, வெற்றிகரமாக போய் கொண்டிருக்கிறது.

ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் வைத்து இதுவரை நடந்து வந்த விவேகம் படப்பிடிப்பு, இப்போது தான் நிறைவடைந்திருக்கிறது. அதனை தொடர்ந்து நடக்க போகும் படப்பிடிப்புக்கான இடம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் விசுவாசம் படக்குழு இப்போது தான் சென்னை வந்திருக்கிறது. விசுவாசம் படத்தில் அஜீத்துடன் , நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் தம்பி ராமய்யா, ரோபோ சங்கர், யோகி பாபு, மதுமிதா மற்றும் பலர் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இந்த படத்தில் மற்றுமொரு பிரபலம் இணைந்திருக்கிறார். கார்த்தியின் ”தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய, திலீப் சுப்பராயன் இந்த திரைப்படத்தில் இணைந்திருக்கிறார்.

”தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தில் பிரத்யேகமான சண்டைகாட்சிகளுக்காக நல்ல பெயர் வாங்கி இருந்த திலீப், இப்படத்தில் இணைந்திருப்பதால் ”விசுவாசம்” படத்திலும் அதே மாதிரியான புதுமைகளை, சண்டை காட்சியில் பார்க்கலாம். என்ற எதிர்பார்ப்பு இப்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீங்க திருவிழாவை நடத்துங்க நடத்தாமல் போங்க.! கரகத்தை தூக்குங்க தூக்காம போங்க.! எங்களுக்கு பார்ட் 2 வேணும்.?
மீனாவுக்கு இது தேவையா? அடுத்த பஞ்சாயத்து மீனாவுக்கு தானா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்!