காலாவுக்கு போட்டியாக ரிலீசாகி, கோடிக்கணக்கில் வசூல் செய்திருக்கும் பிரம்மாண்ட திரைப்படம்;

 
Published : Jun 08, 2018, 11:21 AM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
காலாவுக்கு போட்டியாக ரிலீசாகி, கோடிக்கணக்கில் வசூல் செய்திருக்கும் பிரம்மாண்ட திரைப்படம்;

சுருக்கம்

this movie overtakes super stars movie in box office

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் காலா திரைப்படம், நேற்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெற்றிகரமாக ரிலீசாகியது. பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே ரிலீசான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல விதமான விமர்சனங்களையே பெற்றிருக்கிறது. அந்த விமர்சனங்களுக்கு காரணம் காலா இயக்குனர் பா.ரஞ்சித். அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளையும், அதற்காக போராடும் அவர்களின் வாழ்க்கையும் தான் ரஞ்சித்தின் கதையில் சாராம்சம்.

இந்த காலா திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியா? தோல்வியா? என்பது கூறித்து வெவ்வேறு விதமான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் காலாவுக்கு போட்டியாக, உலகெங்கிலும் ரிலீசாகிய மற்றுமொரு திரைப்படம், இப்போது வசூலில் பிரம்மாண்ட சாதனைகளை படைத்திருக்கிறது. ”ஜூராசிக் வேர்ல்ட்: ஃபாலன் ஆஃப் தி கிங்டம்” திரைப்படம்  நேற்று பிரம்மாண்டமாக ரிலீசாகியது.

இந்த திரப்படத்தின் முந்தய பாகங்கள் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதே போல இப்போது திரைக்கு வந்திருக்கும் ”ஃபாலன் ஆஃப் தி கிங்டமும்” நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பொதுவாகவே இது போன்ற ஹாலிவுட் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். இந்த திரைப்படத்திற்கு அப்படி ஒரு வரவேற்பு தான் கிடைத்திருக்கிறது. இதன் ஆரம்பகட்ட வசூல் மட்டும் 136 கோடி ரூபாயை தாண்டி இருக்கிறது.

இத்திரைப்படம் தற்போது உலகெங்கிலும் உள்ள சில நாடுகளில் மட்டுமே ரிலீசாகி இருக்கிறது. இனிதான் சீனா, எகிப்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் வெளியாகும். அப்போது எப்படியும் ”ஃபாலன் ஆஃப் தி கிங்டம்” வசூல் பலமடங்கு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?