தந்தையர் தின வாழ்த்து கூறுவதற்கு கூட இவ்வளவு ஆபாசமா? சன்னி லியோனின் கணவரை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..!

 
Published : Jun 18, 2018, 12:26 PM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
தந்தையர் தின வாழ்த்து கூறுவதற்கு கூட இவ்வளவு ஆபாசமா? சன்னி லியோனின் கணவரை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..!

சுருக்கம்

this kind of photos are not necessary for saying fathers day wishes

நேற்று தந்தையர் தினம் உலகெங்கிலும் கடைபிடிக்கப்பட்டது. இந்நாளில், பிள்ளைகள் மீது அன்பை பொழிந்து, அவர்கள் வாழ்க்கையை உயர்த்த பல தியாகங்கள் செய்த தந்தையரை, அவர்கள் பிள்ளைகள் வாழ்த்துகள் தெரிவித்து மெய்சிலிர்க்க செய்தனர். அதே போல பல்வேறு பிரபலங்களும் தங்கள் தந்தையருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

பிரபல கவர்ச்சி நடிகையான சன்னி லியோனின் கணவரும், தந்தையர் தினத்தன்று ஒரு வாழ்த்து பதிவை வெளியிட்டிருக்கிறார். ஆனால் இவரின் வாழ்த்து பதிவோ கடும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. சன்னி லியோன் மற்றும் அவர் கணவர் இருவரும் இணைந்து, ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். மேலும் வாடகைத்தாய் மூலம் இவர்களுக்கு இரட்டை குழந்தைகளும் இருக்கின்றனர்.

இவ்விதம் மூன்று குழந்தைகளுக்கு தந்தையான சன்னி லியோனின் கணவர், இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு தந்தையர் தின வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அந்த பதிவில் தங்கள் வளர்ப்பு மகள் நிஷா தங்களுக்கு கிடைத்ததற்காக நன்றி தெரிவித்திருக்கும் அவர், ஒரு தந்தையாக தன் மகள் மீது தான் வைத்திருக்கும் பாசத்தையும் அதில் கூறி இருக்கிறார்.

ஆனால் அந்த வாழ்த்துடன் இணைத்திருக்கும் புகைப்படம் தான் கொஞ்சம் ஆபாசமாக இருக்கிறது. இதனால், தந்தையர் தின வாழ்த்து கூற இவ்வளவு ஆபாசமான புகைப்படம் தேவை இல்லை. என கூறி சன்னி லியோனின் கணவரை திட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜயகாந்த் மகன் ஹீரோவாக பாஸ் ஆனாரா? ஃபெயில் ஆனாரா? கொம்புசீவி விமர்சனம் இதோ
2025-ல் 100 கோடிக்கு மேல் வசூலை வாரிசுருட்டியும் அட்டர் பிளாப் ஆன டாப் 5 படங்கள்