ஏஜிஎஸ் ஆபிஸில் சிக்கிய முக்கிய ஃபைல்?... விஜய்யிடம் விசாரணை நடத்த அதுதான் காரணமா?

By Kanimozhi PannerselvamFirst Published Feb 5, 2020, 6:25 PM IST
Highlights

ஷூட்டிங் ஸ்பார்ட்டில் சிறிது நேரம் விசாரணை நடத்திய அதிகாரிகள் விஜய்யை தங்களது வாகனத்தில் சென்னை வரும் படி அழைத்துள்ளனர். 

காலை முதலே பிகில் பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விஜய் - அட்லீ கூட்டணியில் உருவான பிகில் திரைப்படம், இதுவரை எந்தவொரு படமும் வசூல் செய்யாத அளவிற்கு 300 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. அதை அப்படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தியும் தனது ட்வீட் மூலம் உறுதி செய்திருந்தார். 

இந்நிலையில் தேனாம்பேட்டையில் உள்ள ஏஜிஎஸ் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் வருமான வரித்துறையினரின் கையில் முக்கிய ஃபைல் ஒன்று சிக்கியதாக கூறப்படுகிறது. அதில் பிகில் படத்தில் நடித்ததற்காக தளபதி விஜய்க்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படத்தின் வசூல், வரவு செலவு கணக்குகளிலும் குளறுபடிகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

அதை பார்த்த பின்னரே மாஸ்டர் பட ஷூட்டிங் ஸ்பார்ட்டிற்கு விரைந்த ஐ.டி. அதிகாரிகள் விஜய்யிடம் முறையாக சம்மன் கொடுத்து விசாரணையில் இறங்கியுள்ளனர். இதனால் மாஸ்டர் படத்திற்காக நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.யின் இரண்டாவது சுரங்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

ஷூட்டிங் ஸ்பார்ட்டில் சிறிது நேரம் விசாரணை நடத்திய அதிகாரிகள் விஜய்யை தங்களது வாகனத்தில் சென்னை வரும் படி அழைத்துள்ளனர். ஆனால் விஜய் தன்னுடைய சொகுசு காரிலேயே வருவதாக கேட்டுக்கொண்டதை அடுத்து, அவர் காரிலேயே வர அனுமதி அளித்துள்ளனர்.
 

click me!