சீரியல் நடிகையின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகரா?.... சின்னத்திரையில் தீயாய் பரவி வரும் தகவல்...!

By Kanimozhi Pannerselvam  |  First Published May 4, 2020, 11:50 AM IST

இதனால் கடந்த ஒரு வருடமாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்த நிலையில், தற்போது இருவரும் விவாகரத்து முறையாக நீதிமன்றத்தை நாடி விவகாரத்து பெற்றுள்ளனர். 


விஜய் டிவியில் ஒளிபரப்பான, 'அவளும் நானும்' சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர், நடிகை மேக்னா வின்செண்ட். தமிழில் பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தில் நடித்துள்ளார்.  மலையாள நடிகையான மேக்னா, மாடலாகவும் பிரபலமானவர். அதே போல் மலையாலயாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார்.மேலும் தெய்வம் தந்த வீடு, பொன்மகள் வந்தாள் ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார்.

Latest Videos

இந்நிலையில் மேக்னா, டான் டோனி என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன், கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். எர்ணாகுளத்தில் உள்ள புனித பிரான்சிஸ் தேவாலயத்தில் வைத்து இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின், சீரியல் நடிப்பதில் இருந்து விலகியே இருந்த  இவர், மீண்டும் வாய்ப்புகள் தேடி வர, சீரியல்களில் நடிக்க துவங்கினார். இவர் சீரியல் நடிக்க துவங்கியதும், கணவன் - மனைவிக்குள் ஒரு சில கருத்து வேறுபாடுகள் துளிர் விட துவங்கியது. 

இதையும் படிங்க: 

இதனால் கடந்த ஒரு வருடமாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்த நிலையில், தற்போது இருவரும் விவாகரத்து முறையாக நீதிமன்றத்தை நாடி விவகாரத்து பெற்றுள்ளனர். இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ள நிலையில், டோனி மறுமணத்திற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: ஒட்டு மொத்த அழகையும் ஒரே போட்டோவில் காட்டிய யாஷிகா... சொக்கிப் போன ரசிகர்கள்...!

இந்நிலையில் பொன்மகள் வந்தாள் சீரியலில் நடித்து வந்த போது நடிகர் விக்கிக்கும், மேக்னாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது சட்டப்படி விவாகரத்து பெற்றுள்ள மேக்னா, விக்கியை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து இருவரது தரப்பில் இருந்தும் எவ்வித தகவலும் வராததால் ரசிகர்கள் மிகுந்த குழப்பம் அடைந்துள்ளனர். 

click me!