
பிரபல தமிழ் சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகி வந்த ”சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் லஷ்மி ராமகிருஷ்ணன். தொகுப்பாளராக மட்டுமல்லாமல், நல்ல நடிகையாகவும், இயக்குனராகவும் திரைத்துறையில் தன்னை நிரூபித்திருக்கும் இவர். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி குறித்து சமீபத்தில் ஒரு ட்வீட் செய்திருந்தார்
அதில் தான் இனி இயக்குனர் பணியில் முழுமையாக ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தார். மேலும் சமீபத்தில் மதுரை நீதிமன்றம் இந்நிகழ்ச்சிக்கு வழங்கி இருக்கும் தடை குறித்து அதில் குறிப்பிட்டிருந்தார். இது தற்காலிகம் தான் நிரந்தர தடை அல்ல.
எப்படி இருந்தாலும் இனி அதை சேனல் பார்த்து கொள்ளும். சொல்வதெல்லாம் உண்மை-க்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்றெல்லாம் அதில் கூறி இருந்த ”லஷ்மி ராமகிருஷ்ணன்”. இன்று வெளியிட்டிருக்கும் ட்விட்டர் ட்வீட் ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்திருக்கிறது.
இந்த நிகழ்ச்சியின் அமைப்பு வேண்டுமானால் விவாதத்துக்குரியதாக இருக்கலாம். ஆனால் இதில் யாரையும் நாங்கள் தூண்டி விட்டு பேச வைப்பதில்லை. இங்கு பகிர்ந்துகொள்ளப்பட்ட உணர்வுகள் உண்மையானவை. என தெரிவித்திருக்கும் அவர், இறுதியாக ”சொல்வதெல்லாம் உண்மைக்கு” என் தரப்பிலிருந்து குட் பை என தெரிவித்திருக்கிறார். இதனால் லஷ்மி ராமகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை விட்டு நிரந்தரமாக விலகிவிட்டாரா? என அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.