
நடிகர் விஜய் நேற்று நள்ளிரவு தூத்துகுடி சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியும் செய்தார்.
விஜயின் திடீர் வருகை குறித்து தூப்பாக்கி சூட்டில் பலியானவரின், உறவினர் பெண் ஒருவர் கூறியபோது, நள்ளிரவு 2 மணிக்கு இரண்டு மோட்டார் சைக்கிள் எங்கள் வீடு அருகே நின்றது. இந்த நேரத்தில் யார் என்று நாங்கள் கதவை திறந்து பார்த்தபோது விஜய் நின்றிருந்தார்.
நள்ளிரவில் வந்ததற்காக கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டு கொண்ட விஜய், எங்கள் துயரத்தில் ஒரு மகனை போல் பங்கெடுத்து கொண்டார். புகைப்படம் கூட எடுக்க வேண்டாம் என்று கூறி மிகவும் எளிமையாக நடந்துக்கொண்டார். அவருடைய வருகை எங்களுக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது என்று அந்த பெண் உருக்கமாக கூறியுள்ளார்.
மேலும் நிதியுதவி எதுவும் செய்யாமல் வெறும் புகைப்படங்கள் மட்டும் எடுத்து விளம்பரத்திற்காக சென்ற ஒரு சிலரின் மத்தியில் எளிமையாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவியும் செய்து வந்துள்ளதால் விஜயை தொடர்ந்து பலர் பாராட்டி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.