ஜெயிலர் படத்தில் டெரரான வில்லன் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது இந்த உச்ச நடிகர் தானாம்..

By Ramya s  |  First Published Aug 25, 2023, 4:58 PM IST

ஜெயலிலர் படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வு செய்யப்பட்ட நடிகர் விநாயகன் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?


ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ரஜினியின் மாஸான ஸ்டைலிஷான நடிப்பை அவரின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். மேலும் ஜெயிலர் படத்தில் டெரரான வர்மன் என்ற வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த வினாயகனின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இருப்பினும், ஜெயலிலர் படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வு செய்யப்பட்ட நடிகர் விநாயகன் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். அந்த நெகட்டிவ் ரோலில் நடிக்க இருந்தது மலையாள மெகாஸ்டார் மம்முட்டி தானாம்.

ஜெயிலர் படத்தில் ரஜினியின் மகனாக நடித்த நடிகர் வசந்த் ரவி, விநாயகன் வேடத்தில் முதலில் மம்முட்டியே பரிசீலிக்கப்பட்டார் என்ற தகவலை உறுதிப்படுத்தினார். இதுகுறித்து பிரபல மலையாள பத்திரிகைக்கு பேட்டியளித்த வசந்த் ரவி  "வில்லன் கேரக்டருக்கு மம்முட்டி சார் தான் முதல் சாய்ஸ். ரஜினி சார் தான் என்னிடம் சொல்லியிருந்தார். மம்முட்டி ஒரு சிறந்த தேர்வாக இருப்பார் என்று நெல்சன் சார் சொன்னதும், ரஜினி சார் மம்முட்டிக்கு போன் செய்து சொன்னார். ஆனால் பின்னர் அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டனர். மலையாள திரையுலகில் மிகப்பெரிய உச்ச நடிகராக இருக்கும் மம்முட்டி போன்ற ஒரு நடிகரை நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடிக்க வைப்பது சரியாக இருக்காது. முக்கியமாக அவரின் ரசிகர்கள் அதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று தெரியாது என்று ரஜினி கருதினார். 

Latest Videos

அடிச்சி தூக்கு.. வசூலில் வரலாற்று சாதனை படைத்த தலைவரின் ஜெயிலர்! அதிகார பூர்வமாக அறிவித்த சன் பிச்சர்ஸ்!

எனவே மம்முட்டியை அழைத்து ரஜினி இந்த பிரச்சனையை தெரிவித்துள்ளார். மேலு இருவரும் சேர்ந்து இன்னொரு படம் செய்ய வேண்டும் என்று ரஜினி கூறினார். அது சரியான முடிவு என்று நானும் உணர்ந்தேன்” என்று தெரிவித்தார். ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினியும், இந்த தகவலை கூறியிருந்தார். ஆனால் அவர் அந்த நடிகரின் பெயரை வெளியிடவில்லை. ஆனால் வசந்த் ரவி கூறியதன் மூலம் அந்த நடிகர் மம்முட்டி தான் என்பது உறுதியாகி உள்ளது.

undefined

பாக்ஸ் ஆபிஸில் மிரட்டிய ஜெயிலர் 

அண்ணாத்த படம் வெளியாகி 2 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் படம் என்பதால் ஜெயிலர் படம் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றி மூலம் தான் ஒரு பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை ரஜினி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸில் சாதனைகளை முறியடித்து வருகிறது. சூப்பர் ஸ்டாரின் நடிப்பு, மோகன்லால், ஷிவ்ராஜ் குமார் ஆகியோரின் கேமியோ, நெல்சன் திலீப்குமாரின் இயக்கம், அனிருத்தின் மிரட்டலான பின்னணி இசை பார்வையாளர்களை கச்சிதமாக கவர்ந்தன. இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். இதில் ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா பாட்டியா, சுனில், விநாயகன், மிர்னா மேனன், மற்றும் வசந்த் ரவி என பலர் நடித்துள்ளனர். 

click me!