
நேற்று நடந்த விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் தென்னித்திய திரையுலக பிரபலங்கள் அனேகமானோர் கலந்து கொண்டனர். ஆனால் கமல், ரஜினி, விஜய், அஜித் போன்ற மிக முக்கிய பிரபலங்கள் இந்த நிகழ்வில் நேற்று கலந்து கொள்ளவில்லை.
இவர் கண்டிப்பாக வருவார் என எதிர்பார்த்த விஜய் ரசிகர்கள், கூட பெரிதும் ஏமாந்து விட்டனர் நேற்றைய நிகழ்வின் போது. ஏனென்றால் நேற்று விஜய் அவார்ட்ஸ் நிகழ்வில் கலந்து கொண்டவர்களில், பெரும்பாலானோர் விஜய் ரசிகர்கள்.
இந்த விருது வழங்கும் விழாவில் நடிகர் தனுஷிற்கு, சிறந்த என்டர்டெய்னருக்கான விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய தனுஷ். "ரசிகர்களின் ஆதரவால் தான், என்னால் திரையுலகில் இவ்வளவு பெரிய இடத்திற்கு வரமுடிந்தது. என்னை விட திறமையான, அதிக அழகான நடிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். என தன்னடக்கத்துடன் தெரிவித்தார்.
ஆனால் அவரின் தன்னடக்கமான அந்த பேச்சு, விஜய் ரசிகர்களுக்கு தளபதியை தான் நினைவிற்கு கொண்டுவந்தது. விஜய் பேச்சின் ஓவ்வொரு எழுத்தையும் நினைவில் வைத்திருக்கும் அவர் ரசிகர்கள், 2014ல் எங்க தளபதி விருது வாங்கும் போது கூட, இப்படி தானே பேசினார் என யோசித்திருக்கின்றனர்.
அப்போது விஜயிடம் ”நீங்க தான் அடுத்த சூப்பர் ஸ்டாரா? என ஒரு கேள்வி கேட்கப்பட்டது” அதற்கு பதிலளிக்கும் விதமாக தான் விஜய் ”எனக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் மீது எப்போதுமே ஆசை இல்லை. ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான் எப்போதும்.
என்னை விட திறமையான அழகான நடிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என தன்னடக்கத்துடன் தெரிவித்திருந்தார். இப்போது தனுஷ் அந்த வசனத்தை அப்படியே கூறியிருப்பது, விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.