நீச்சல் குளத்தில் டால்ஃபினுடன் ஃபோட்டொ! புது சர்ச்சையில் சிக்கிய திரிஷா;

Published : Sep 21, 2018, 05:59 PM IST
நீச்சல் குளத்தில் டால்ஃபினுடன் ஃபோட்டொ! புது சர்ச்சையில் சிக்கிய திரிஷா;

சுருக்கம்

தமிழ்திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக ஒரு காலத்தில் வலம் வந்த திரிஷாவுக்கு, சமீபகாலமாக தமிழ் திரையுலகில் சொல்லும்படியான படம் ஒன்றும் அமையவில்லை. 

தமிழ்திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக ஒரு காலத்தில் வலம் வந்த திரிஷாவுக்கு, சமீபகாலமாக தமிழ் திரையுலகில் சொல்லும்படியான படம் ஒன்றும் அமையவில்லை. இதனால் தற்போது தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார் திரிஷா. விஜய் சேதுபதியுடன் அவர் நடித்துவரும் 96 திரைப்படம் கூட அந்த வகையை சார்ந்தது தான். மேலும் தற்போது திரிஷா ரஜினியுடன் பேட்ட திரைப்படத்திலும் நடிக்கவிருக்கிறார். 

இது ஒரு பக்கமிருக்க சமீபத்தில் திரிஷா வெளியிட்ட புகைப்படம் ஒன்று சர்சையை கிளப்பி இருக்கிறது. சொகுசு விடுதி ஒன்றில் டால்ஃபினுடன் சேர்ந்து திரிஷா எடுத்துக்கொண்ட க்யூட்டான படம் தான் இப்போது அவருக்கு தலைவலியாக அமைந்திருக்கிறது. திரிஷாவிற்கு விலங்குகள் மீது பாசம் அதிகம். அதனாலேயோ என்னவோ அவர் பீட்டாவுக்கு ஆதரவாக இருந்து வந்தார்.

ஆனால் தற்போது அவர் எடுத்துக்கொண்ட இந்த ஃபோட்டோவை பீட்டாவை சேர்ந்தவர்களே வறுத்தெடுத்திருக்கின்றனர். ஹைதராபாத்விலங்குகள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த பத்மஜா திரிஷாவின் இந்த ஃபோட்டோவை பார்த்துவிட்டு, மனிதர்களுடன் விளையாடுவது டால்பின்கள் வேலை இல்லை. விளையாடுவதற்கு அவை பொம்மையும் கிடையாது. அவைகளை சித்ரவதை செய்து தாங்கள் சொல்லும் வேலையை செய்ய வைக்கிறார்கள். அவைகளுடன் மனிதர்கள் விளையாடுவது கொடுமையானது என தெரிவித்திருக்கிறார்.


அதே போல மற்றொரு விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த பரிதா என்பவர் கூறும்போது, கடலில் வாழும் உயிரினம் டால்பின். பொழுதுபோக்கு பூங்காக்களில் அவை சுதந்திரமாக இருக்க முடியாது. அவைகளை விருப்பம்போல் வாழவிடுங்கள் எனவும் தெரிவித்திருக்கிறார். 

விலங்குகளை இயற்கையோடு இணைந்து வாழவிடுங்கள் எனும் கருத்தினை வலியுறுத்தும் பீட்டா அமைப்பினை சேர்ந்தோருக்கு திரிஷாவின் இந்த ஃபோட்டோ எரிச்சலை கிளப்புவதாகவே அமைந்திருக்கிறது என விலங்கு நல அமைப்பை செய்தவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கார்த்திக்-ரேவதி உறவை முடிவுக்குக் கொண்டு வர... பஞ்சாயத்தைக் கூட்டிய சாமுண்டீஸ்வரி: அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!
கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ