
கோலிவுட்டில் கடந்த 13 வருடங்களாக கதாநாயகியாகவே வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை திரிஷா.
சாமி, கில்லி, திருப்பாச்சி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக அறியப்பட்ட இவர், திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் 'ஜோடி' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார், அதன் பின் மூன்று வருடம் கழித்து 'மௌனம் பேசியதே' படத்தில் கதாநாயகியாக அறிமுகம் கொடுத்தார்.
இந்த திரைப்படத்தில் இவருக்கு ஒரு பிரேக் கிடைக்கவே, 2003 யில் தொடர்ந்து 5 படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆனதால் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்தார்.
அன்று ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த திரிஷா இன்று வரை கதாநாயகியாகவே தன்னுடைய திரைப்பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
கடந்த சிலவருடங்களுக்கு முன் திரிஷாவிற்கும், தயாரிப்பாளர் வருண்மணியதிற்கும் திருமண ஏற்பாடு நடைபெற்று நிச்சயதார்த்தம் வரை சென்றது. ஆனால் இந்த திருமணம் ஒரு சில காரணத்தால் இந்த திருமணம் நின்றது.
திருமணம் நின்றதற்கு பின் மீண்டும் தன்னுடைய நடிப்பில் கவனம் செலுத்திவரும் திரிஷா, தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்துவருகிறார்.
இன்று தன்னுடைய 34 வது பிறந்தநாளை, கொண்டாடும் திரிஷாவிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
அதிலும் முக்கியமாக, நடிகை ஸ்ரேயா, சித்தார்த், அனிருத், மனோபாலா , ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் வெங்கட் பிரபு , நடிகை நந்திதா, போன்ற பலர் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திரிஷாவிற்கு நியூஸ் பாஸ்ட் சார்பாகவும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.