
மகாபாரதம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கமலஹாசன் நேரில் ஆஜராக தேவை இல்லை எனவும் இந்த வழக்கிற்கு இடைக்கால தடை விதித்தும் மதுரை உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது.
மகாபாரதத்தை இழிவு படுத்தும் வகையில் நடிகர் கமலஹாசன் கருத்து கூறியதாக வள்ளியூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பின்னர், இந்த வழக்கு குறித்து கமலஹாசன் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நேற்று, மகாபாரதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேட்டியளித்ததாக தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரியும் வள்ளியூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோரியும் கமல்ஹாசன் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கிற்கு இடைக்கால தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் வள்ளியூர் நீதிமன்றத்தில் கமலஹாசன் ஆஜராக வேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.