’அட்வான்ஸ் வாங்கிய சில நடிகர்கள் ஜெயலலிதாவுக்கு பயந்து என் படங்களில் நடிக்க மறுத்தார்கள்’...திருநாவுக்கரசர் எம்.பி.

By Muthurama LingamFirst Published Sep 6, 2019, 10:20 AM IST
Highlights

’ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சில நடிகர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தேன். அவருக்கும் எனக்கும் பிரச்சனை என்பதால் யாரும் நடிக்க வரவில்லை’ என்று தனது சினிமா கால ஃப்ளாஷ்பேக்கை நேற்று நடந்த ஆடியோ விழா நினைவுகூர்ந்தார் முன்னாள் கதாநாயகனும் இந்நாள் எம்.பியுமான திருநாவுக்கரசர்.

’ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சில நடிகர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தேன். அவருக்கும் எனக்கும் பிரச்சனை என்பதால் யாரும் நடிக்க வரவில்லை’ என்று தனது சினிமா கால ஃப்ளாஷ்பேக்கை நேற்று நடந்த ஆடியோ விழா நினைவுகூர்ந்தார் முன்னாள் கதாநாயகனும் இந்நாள் எம்.பியுமான திருநாவுக்கரசர்.

LS.தியன் பிக்சர்ஸ் S.நட்சத்திரம் செபஸ்தியான்  தயாரித்திருக்கும் படம் ’படைப்பாளன்’. இப்படத்தை LS.பிரபுராஜா எழுதி இயக்கியிருக்கிறார். கதைத்திருட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா  சென்னை பிரசாத்லேப்-ல் நேற்று நடைபெற்றது.இயக்குநர் சீனுராமசாமி, ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோர் கலந்துகொண்ட இவ்விழாவில் அவ்வளவாய் சினிமா விழாக்கள் பக்கம் எட்டிப்பார்க்காத திருநாவுக்கரசர் எம்,பியும் கலந்துகொண்டார்.

அவ்விழாவில் பேசிய அவர்,"ஒரு நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது நிறையபேர் மகிழ்ச்சியோடு வந்து அமர்வார்கள். நேரம் ஆனதும் எப்படா முடியும் என்று தோன்றும். எனக்கு சினிமாவில் சில அனுபவம் உண்டு. சில படங்களில் தயாரிக்க நடிக்க என்று இருந்தேன். திரைக்கதையும் எழுதியுமிருக்கிறேன். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சில நடிகர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தேன். அவருக்கும் எனக்கும் பிரச்சனை என்பதால் யாரும் நடிக்க வரவில்லை. இந்தப்படத்தின் இயக்குநர் தம்பி பிரபுராஜா மிகவும் துடிப்பான இளைஞன். அவரை எனக்கு லயோலா காலேஜில் படிக்கும் போதே தெரியும். அவரை எப்போது பார்த்தாலும் ஊக்கப்படுத்துவேன். மிகவும் மன உறுதியோடு செயல்படக்கூடியவர். 

இந்தப்படத்தை முழுமையாக பிரபுராஜா முடித்து விட்டார் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு கதை தான் முதல் முக்கியம். கதை தான் ஹீரோ. நடிகர்கள் எல்லாம் இரண்டாவது தான். எம்.ஜி.ஆருக்கு கூட தோற்ற படங்கள் உண்டு. ஆக கதை தான் எப்பவும் முக்கியம். அதேபோல் அடுத்தடுத்த காட்சிகள் பெரிய சுவாரசியத்தை தர வேண்டும். பிரபுராஜா உதவி இயக்குநராக ரொம்ப கஷ்டப்பட்டவர். நிறையபேரிடம் கதைகளைச் சொல்லியும் இருக்கிறார். அதனால் அவரது அனுபவம் தான் இந்தப்படம். உண்மையிலே உதவி இயக்குநர்களின் வாழ்வு மிகவும் கடினமானது தான்.  பலபேர் உதவி இயக்குநர்களாகவே வாழ்க்கையை முடித்திருக்கிறார்கள். ஆனால் பிரபுராஜா மிகவும் சிரமப்பட்டு எடுத்திருக்கிறார். படத்தின் இசை சிறப்பாக இருக்கிறது. பாடல்களை கவிஞர்கள் நன்றாக எழுதி இருக்கிறார்கள். கேமராமேன் சூப்பரா பண்ணிருக்கார். கதையின் கருவும் ரொம்ப சிறப்பாக இருக்கு. அது கரண்ட்ல இருக்குற விசயம் என்பதால் நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும்.  சிலபேருக்குத் தான் கேமரா லுக் அமையும். பிரபுராஜாவுக்கு அது நல்லா அமைஞ்சிருக்கு. பெரிய பந்தா எதுவும் இல்லாமல் இயல்பா நடிச்சிருக்கார். ஆக எல்லா வகையிலும் படம் நல்லா வரும்.

 இப்ப சினிமா ரொம்ப கஷ்டத்துல இருக்கு. ஏன் இந்தியாவே ரொம்ப கஷ்டத்துல தான் இருக்கு. சினிமா என்பதே பிரசவ வலி மாதிரி தான். பெரிய நடிகர்கள் பெரிய இயக்குநர்கள் எல்லாம் சம்பளத்தை குறைக்க வேண்டும். சம்பளங்களை குறைச்சா சினிமா இன்னும் சுகாதாரமா இருக்கும். ஹெல்த்தியா இருக்கும். அதனால் இந்த விசயத்தை கன்சல்ட் பண்ணலாம். சினிமா நிறையபேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கக் கூடிய தொழில் இது’என்று பேசினார்.
 

click me!